சில்லி பேஸ்ட் செய்முறை | Chilli Paste Recipe !





சில்லி பேஸ்ட் செய்முறை | Chilli Paste Recipe !

0
தேவையானவை: 

காய்ந்த மிளகாய் – 20,

வினிகர் – ஒரு டேபிள் ஸ்பூன்,

உப்பு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
சில்லி பேஸ்ட் செய்முறை

காய்ந்த மிளகாயை வெது வெதுப்பான நீரில் நான்கு மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி விட்டு (தண்ணீர் சேர்க்காமல்), 

பின்னர் வினிகரும், விரும்பினால் ஒரு ஸ்பூன் உப்பும் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். 

இதைக் கை படாமல் ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து, ஃப்ரிட்ஜில் வைத்து, ஒரு மாதம் வரை பயன் படுத்தலாம்.

இதனுடன் உரித்த பூண்டு ஆறு பல் சேர்த்து அரைத்து, பேஸ்டைச் சிறிது எண்ணெயில் கொஞ்சம் வதக்கி, ஆறியதும் எடுத்தும் சேமித்துக் கொள்ள லாம். 

குறிப்பு: இந்த பேஸ்ட்டை தான் சிங்கப்பூரில் நூடுல்ஸ் (மீகொரிங், பீ ஹூன், நாசி கொரிங்) வகைகளுக்கு முக்கியமாகச் சேர்ப்பார்கள். 

நமக்கும் நிறைய பயன்படப் போவது இது தான்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)