இத்தாலியன் ஹாட் சாக்லேட் செய்முறை / Italian Hot Chocolate Recipe !





இத்தாலியன் ஹாட் சாக்லேட் செய்முறை / Italian Hot Chocolate Recipe !

0
இத்தாலியன் ஹாட் சாக்லேட்டை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். 
இத்தாலியன் ஹாட் சாக்லேட்
அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

பால் – 3 கப்

சோள மாவு – 1 டீஸ்பூன்

சாக்கோ சிப்ஸ் – 6 டேபிள் ஸ்பூன்

தேன் – 2 டீஸ்பூன்

சர்க்கரை – 2 டீஸ்பூன்

கொக்கோ பவுடர் – 2 டீஸ்பூன்

செய்முறை :

* முதலில் பாலில் சோள மாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

* ஒரு அடி கனமாக பாத்திரத்தில் அடுப்பில் வைத்து சோள மாவு கலந்த பாலை ஊற்றி சூடேற்றவும்.

* அத்துடன் சாக்கோ சிப்ஸ் மற்றும் தேன் சேர்த்து, குறைவான தீயில் தொடர்ந்து கிளறி கொண்டடே இருக்க வேண்டும்.

* சாக்கோ சிப்ஸ் முற்றிலும் கரைந்ததும், அதில் கொக்கோ பவுடர் மற்றும் சர்க்கரை சேர்த்து, 

ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி, டம்ளரில் ஊற்றி பரிமாறினால், இத்தாலியன் ஹாட் சாக்லேட் ரெடி.

குறிப்பு :

* விருப்பப் பட்டால் இந்த ஹாட் சாக்லேட்டுடன் 1/4 டீஸ்பூன் வென்னிலா எசன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம். 

* இதில் சேர்க்கப் பட்டுள்ள சோள மாவு, இந்த பானத்தை கெட்டித் தன்மைக்காக சேர்க்கப் பட்டுள்ளது. 

உங்களுக்கு ஹாட் சாக்லேட் இன்னும் சற்று கெட்டியாக வேண்டுமானால், சற்று அதிகமாக சோள மாவை சேர்த்துக் கொள்ளலாம். 

* இந்த ஹாட் சாக்லேட் பானத்தை முழுமையாக குறைவான தீயில் தான் செய்ய வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)