முளை கட்டிய பச்சைப் பயறு சாதம் செய்முறை / Sprouts Green Powder Rice Recipe !





முளை கட்டிய பச்சைப் பயறு சாதம் செய்முறை / Sprouts Green Powder Rice Recipe !

தேவையான பொருட்கள் :

உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்,

முளை கட்டிய பச்சைப் பயறு - அரை கப்,

வெங்காயத் தாள் - ஒரு கட்டு,

வெங்காயம் - ஒன்று,

இஞ்சி - சிறிய துண்டு,

பச்சை மிளகாய் - 4,

மிளகுத் தூள் - அரை டீஸ்பூன்,

குடை மிளகாய் - பாதி அளவு,

முட்டை கோஸ் - 50 கிராம்,

எலுமிச்சம் பழம் - ஒரு மூடி,

கொத்த மல்லி - சிறிதளவு,

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : 

முளை கட்டிய பச்சைப் பயறு சாதம்

இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து அரைத்து கொள்ளவும். 

வெங்காயம், வெங்காயத் தாள், கொத்த மல்லி, குடை மிளகாய், முட்டை கோஸ் ஆகிய வற்றை பொடியாக நறுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அரைத்த இஞ்சி, பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். 

அடுத்து வெங்காயம், வெங்காயத் தாள், குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் முளைகட்டிய பச்சைப் பயறு, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

முளைகட்டிய பச்சைப் பயறு நன்றாக வெந்ததும் இதனுடன் உப்பு, மிளகுத் தூள், வடித்த சாதம் சேர்த்துக் 

கிளறி இறக்கி, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

சூப்பரான முளை கட்டிய பச்சைப் பயறு சாதம் ரெடி.
Tags: