அன்னாசி தேங்காய்ப்பால் ஜூஸ் செய்வது எப்படி?





அன்னாசி தேங்காய்ப்பால் ஜூஸ் செய்வது எப்படி?

பெண்களுக்கு ஏற்படும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று வெள்ளைபடுதல் ஆகும். இந்த பிரச்சனை உள்ள பெண்கள் அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல் போன்ற நோய்கள் குணமாகும்.
ஆன்டி ஆக்ஸிடன்ட்டான செலீனியம் உள்ளதால், தேங்காய்ப்பால் ஆர்த்தரைட்டிஸின் வீரியத்தைக் குறைக்கும். பேக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைத் தொற்றுக்கு எதிரான தன்மை கொண்ட தேங்காய்ப்பால், வைரஸ் காய்ச்சல், பூஞ்சை மற்றும் பேக்டீரியா தொற்று போன்ற உடல் நோய் வராமல் தவிர்க்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
அன்னாசி பழத்தில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கின்றது. அன்னாசி பழத்தில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் ஜீரண மண்டலத்தினை வலுப்படுத்துகிறது.
தேங்காய்ப்பாலில் உள்ள பாஸ்பரஸ், எலும்பை உறுதியாக்க வல்லது. மெக்னீஸியம் நிறைந்துள்ள தேங்காய்ப்பால் உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.

தேவையான பொருட்கள் :

அன்னாசிப்பழம் - 6 துண்டுகள்,

தேங்காய்ப் பால் - அரை கப்,

தேன் - சுவைக்கு ஏற்ப.

செய்முறை : 

அன்னாசி - தேங்காய்ப்பால் ஜூஸ்

அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டு களாக்கி கொள்ளவும்.

மிக்சியில் அன்னாசிப் பழத்துண்டு களை போட்டு அதனுடன் சிறிது நீர் சேர்த்து, அரைத்து வடிகட்டி கொள்ளவும்.

வடிகட்டிய அன்னாசி பழ ஜூசுடன் தேங்காய்ப் பால், தேன் கலந்து பருகவும்.
Tags: