ரொமானோ பீன்ஸ் பொரியல் செய்முறை / Romano Beans Poriyal Recipe !





ரொமானோ பீன்ஸ் பொரியல் செய்முறை / Romano Beans Poriyal Recipe !

தேவையானவை:

பீன்ஸ நறுக்கியது - ஒரு கிண்ணம்

சின்ன வெங்காயம் - மூன்று

மஞ்சள் தூள் - சிறிது

வேக வைத்து பிழியப் பட்ட துவரம் பருப்பு - 1/2 கைப்பிடி

கொத்து மல்லி தழை - ஒரு கொத்து

ரொமானோ பீன்ஸ் பொரியல்
அரைக்க:

தேங்காய் பத்தை - 3

காய்ந்தமிளகாய் - 1 காரத்திற்கேற்ப‌

சீரகம் - கொஞ்சம்

தாளிக்க:

எண்ணெய்

கடுகு

உளுந்து

கடலைப் பருப்பு

பெருங்காயம்

கறிவேப்பிலை

செய்முறை:

சாம்பாரு க்கு வேக வைத்த துவரம் பருப்பில் ஒரு அரை கைப்பிடி அளவுக்கு பிழிந்து வைத்துக் கொள் ளவும்.

பீன்ஸை நன்றாகக் கழுவி விட்டு விருப்ப மான வடிவ த்தில் நறுக்கிக் கொள்ளவும்.

சின்ன வெங்காய த்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

தேங்காய் பத்தை யுடன் சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலை அடுப்பி லேற்றி எண்ணெய் விட்டு காய்ந் ததும் தாளிக்க வேண்டிய வற்றைத் தாளித்து விட்டு, வெங்காயம் சேர்த்து வதக் கவும்.

அடுத்து பீன்ஸ் சேர்த்து வதக்கி சிறிது மஞ்சள் தூள், உப்பு, காய் வேக சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

காய் வெந்த பிறகு துவரம் பருப்பு, அரைத்த தேங்காய் கலவை இரண் டையும் சேர்த்து கிண்டி விடவும்.

புதிதாக சேர்த்தவை எல்லாம் சூடாகி, பீன்ஸுடன் நன்றாகக் கலந்ததும் கொத்து மல்லி தூவி இறக்கவும்.

இது எல்லா சாதத்து க்கும் பொருத்த மாக இருக்கும்.
Tags: