கருப்பட்டி பொங்கல் செய்வது எப்படி?





கருப்பட்டி பொங்கல் செய்வது எப்படி?

மகளின் ‘ஜேப்பனீஸ் குக்கிங்’ கிற்காக தாய் ஸ்டிக்கி ரைஸ் வாங்க ஆரம்பித்து, பிறகு அடிக்கடி வாங்கி விடும்படி ஆகி விட்டது. 

கருப்பட்டி பொங்கல் செய்முறை
ஸ்டிக்கி யாக இருக்கும் இது நல்ல வாசனையுடன் சுவையும் அலாதி யாக இருக்கும். வெறும் சாதத்தையே இரண்டு பேரும் போட்டிபோட்டு சாப்பிட்டு விடுவோம்.

இந்த அரிசியை வைத்து எளிய முறையில் ஒரு இனிப்புப் பொங்கல் செய்வோம். விருப்பமானால் நெய்யில் முந்திரி வறுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். 

ஏலக்காய் சேர்ப்பதானாலும் இற‌க்கும் போது பொடியாக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். என்னைக் கேட்டால் பனை வெல்லம் & தேங்காய்ப் பால் சேர்த்து செய்வதால் இது எதுவுமே தேவை யில்லை என்பேன். நம் வீட்டில் உள்ள சாதாரண பச்சரிசியிலும் செய்யலாம்.

எங்க வீட்டில் பெரும் பொங்கலுக்கு சர்க்கரைப் பொங்கலும், பால் பொங்கலும் செய்வாங்க. முதலில் சர்க்கரைப் பொங்கலைப் பார்ப்போம். 

தேவை யானவை:

பச்சரிசி - ஒரு கப்

பனை வெல்லம் - 3/4 கப்

தேங்காய் பால் - 3/4 கப்

உப்பு - துளிக்கும் குறை வாக‌

செய்முறை:

அரிசியைக் கழுவி விட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு ஐந்து அல்லது ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு ஊறிய அரிசியை தண்ணீ ருடனே குக்கரிலோ அல்லது ஒரு பாத்திர த்திலோ வைத்து குழை யாமல் fluffy யாக‌ வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பனை வெல்ல த்தைப் பொடித்து தேங்காய்ப் பாலுடன் சேர்த்து ஒரு கிண்ண த்தில் போட்டு 

அடுப்பில் ஏற்றி வெல்லம் கரைந்து வந்ததும் மண் & தூசு இல்லாமல் வடிகட்டி அதை ஒரு வாணலில் ஊற்றி மீண்டும் அடுப்பி லேற்றி கொதிக்க ஆரம்பி த்ததும், வேக வைத்துள்ள சாதத்தை இதில் கொட்டி விடாமல் கிண்டவும்.

எல்லாம் சேர்ந்து இறுகி வந்ததும் இறக்கவும். இதை அலங் கரிப்பது உங்கள் விருப்பம்.
Tags: