டேஸ்டியான கீரைப் பொரியல் செய்வது எப்படி?





டேஸ்டியான கீரைப் பொரியல் செய்வது எப்படி?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற ஆரோக்கியமான கீரை பருப்புக்கீரை. இது ரத்தத்தை சுத்தப்படுத்தி நீண்ட கால நோய்களின் தாக்கத்தைக் குரைக்கக் கூடியது. 
கீரைப் பொரியல்
பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்வது. பருப்புக் கீரையுடன் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிடுவது உடலில் உல்ள கெட்ட கொழுப்பை அகற்ற உதவும். 

அடிக்கடி பருப்புக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு உடல் சூடு தணியும். மலச்சிக்கல் நீங்கும். வெயில் காலத்தில் உண்பதற்கு ஏற்ற் கீரை இது. 

பருப்புக் கீரை மசியலுடன் நீராகாரம் சேர்த்து சாப்பிட்டு வர வெயில் காலத்தில் ஏற்படுகிற  உடல் சூடு நீர்க்கடுப்பு வியர்க்குரு வேனல்கட்டிகல் போன்ரவை தவிர்க்கப்படும். 
அதே போல கிராமங்களில் வெயில் காலத்தில் ஏற்படுகின்ற  அம்மை மற்றும் அக்கி பிரச்சனைகளுக்கும் பருப்புக் கீரையை மருந்தாக பயன்படுத்துகிரார்கள். 

பருப்புக் கீரையை நன்கு அரைத்து அக்கி வந்த இடங்களில் மேல்பூச்சாகத் தடவி வந்தால், கொப்புலங்கள்மறைந்து உடல் குளுமையடையும்.
தேவையானப் பொருள்கள்:

கீரை - ஒரு கட்டு

பச்சைப் பருப்பு - ஒரு கைப்பிடி

பூண்டு - 5 பற்கள்

சின்ன வெங்காயம் - 2

மஞ்சள் தூள் - ஒரு துளி

தேங்காய்ப் பூ - ஒரு டீஸ்பூன் (விருப்ப மானால்)

உப்பு - தேவை யான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

கடுகு

உளுந்து

சீரகம்

காய்ந்த மிளகாய் - 2

பெருங்காயம் - சிறிது

செய்முறை:
முதலில் பச்சைப் பருப்பை சிவக்க வறுத்து கழுவி விட்டு, மஞ்சள் தூள் சேர்த்து முக்கால் பதமாக வேக வைத்துத் தண்ணீரை வடித்து விடவும்.

பருப்பு வெந்து கொண்டி ருக்கும் போதே கீரையை ஆய்ந்து தண்ணீ ரில் அலசி எடுத்து நறுக்கி வைக்கவும்.

வெங்காயம், பூண்டையும் நறுக்கி வைக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள் களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து பூண்டை சேர்த்து வதக்கவும்.
பாதரசம் எந்தெந்த மீன்களில் அதிகளவு இருக்கிறது தெரியுமா?
பிறகு வெங்காயம் சேர்த்து வதக் கவும். அடுத்து கீரையை சேர்த்து வதக்கி, பச்சைப் பருப்பு, உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

தண்ணீர் ஊற்ற வேண்டாம். மூடி போட வேண்டாம். சிறிது நேரத்தி லேயே வெந்து விடும். கடைசி யாக தேங்காய்ப் பூ சேர்த்து இறக்கவும்.
Tags: