புட்டு செய்யும் போது ஈர அரிசி மாவைத் தான் பயன் படுத்த வேண்டும். ஈர அரிசி மாவை வீட்டிலேயே தயாரித்து செய்யும் போது புட்டு பூ போல் வரும்.

பச்சரிசி புட்டு

தேவையானப் பொருள்கள்:

பச்சரிசி - ஒரு கப்

வெல்லம்_3/4 கப்

ஏலக்காய் - 1

உப்பு - ஒரு துளிக்கும் குறை வாக‌

முந்திரி - 5

உலர் திராட்சை - 10

செய்முறை:

முதலில் பச்சரி சியைத் தண் ணீரில் நனைத்து ஊற வைக்கவும். நன்றாக ஊறிய பிறகு நீரை வடித்து விடவேண்டும்.

அரிசி ஈரமாக இருக்க வேண்டும். ஆனால் தண்ணீர் கோர்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.

ஏலக்காய், வெல்லம் இவற்றைப் பொடித்துக் கொள் ளவும். ஒரு வாணலி யில் சிறிது நெய் விட்டு முந்திரி, திராட் சையை வறுத்துக் கொள்ளவும்.

அரிசியை மிக்ஸி யில் போட்டு ஈர மாவாக, niceஆக‌ இடித்துக் கொள்ளவும். 

அதை இட்லிப் பானை யில் வைத்து இட்லி அவிப்பது போல் அவித்து எடுத்துக் கொள்ளவும். 

ஆவி வெளியில் வரும் போது சிறிது நேரம் கழித்து நல்ல வாசனை வரும்.

அப்போது மாவை இட்லிப் பானை யில் இருந்து எடுத்து ஆற வைக்கவும். நன்றாக வெந்த மாவு கைகளில் ஒட்டாது.

ஆறிய பிறகு துளிக்கும் குறைவாக உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து, கட்டி களில் லாமல் மாவை உதிர்த்துக் கொள்ள வும். 

உதிர்த்த மாவை மிக்ஸியில் போட்டு pulse ல் வைத்து ஒரு சுற்று சுற்றினால் பூ போல் ஆகி விடும்.

இந்த மாவை மீண்டும் இட்லிப் பானையில் வைத்து அவிக் கவும்.மாவு ஏற்கனவே வெந்து விட்ட தால் இந்த முறை சீக்கிரமே ஆவி வந்து விடும். 

எடுத்து ஒரு பாத்திர த்தில் கொட்டி ஏலத்தூள், வெல்லம், முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி சாப்பிடவேண்டியது தான்.

இப்போது நல்ல சுவை யான, சத்தான, குழந்தை களுக்குப் பிடித்த மான புட்டு தயார்.