பனீர் ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி?

பனீர் ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி?

தேவையானவை:
பாசுமதி அரிசி – 2 கப்,

பனீர் – 100 கிராம்,

பூண்டு – காய்ந்த மிளகாய் அரைத்த விழுது – 2 டீஸ்பூன்,

பெரிய வெங்காயம் – ஒன்று,

பொடியாக நறுக்கிய வெங்காயத் தாள் – ஒரு கைப்பிடி அளவு,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பனீர் ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி?
பாசுமதி அரிசியை உதிர் உதிரான சாதமாக வடித்துக் கொள்ளவும். பனீரை பொடியாக நறுக்கவும். வெங்காயத் தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பூண்டு – காய்ந்த மிளகாய் விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
நறுக்கிய வெங்காயம், பாதியளவு வெங்காயத் தாள், பனீர் துண்டுகள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். 

பிறகு பாசுமதி சாதம், மீதமுள்ள வெங்காயத் தாள், சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
Tags: