சுவையான மினி வெஜ் ஊத்தப்பம் செய்வது எப்படி?





சுவையான மினி வெஜ் ஊத்தப்பம் செய்வது எப்படி?

காய்கறிகளின் தன்மை  வேறுபடுவதைப் பொருத்து, இவற்றை பச்சையாகவோ அல்லது சமைத்தோ பரிமாறலாம். 
சுவையான மினி வெஜ் ஊத்தப்பம் செய்வது எப்படி?

உணவுகளின் தன்மையிலும் தோற்றத்திலும் காய்கறிகளை உபயோகித்து மாறுதல் ஏற்படுத்தி, பின்னர் பரிமாறலாம். காய்கறிகள் பல்வேறு மணத்தை  கொண்டுள்ளன. 

சரியான மணமுள்ள காய்கறிகளை உபயோகப்படுத்தி தேவையான மணத்தை உணவில் பெறலாம். பச்சையிலை காய்கறிகள் ஊட்டச்சத்துகள் நிறைந்த விலை குறைந்த உணவுப் பொருளாகும். 
இவை 3- கரோட்டின், அஸ்கார்பிக் அமிலம், ஃபோலிக் அமிலம், கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துகளை அதிக அளவில் பெற்றுள்ளன. ஆனால் இவற்றில் புரதம் மிக குறைந்த அளவில் காணப்படுகிறது. 

சரி இனி காய்கறிகளை கொண்டு சுவையான மினி வெஜ் ஊத்தப்பம் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையானவை:

இட்லி மாவு – 4 கப், 

கேரட் துருவல – ஒரு கப், 

கோஸ் துருவல் (இரண்டும் சேர்த்து) – ஒரு கப், 

பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், 

குடமிளகாய் (இரண்டும் சேர்த்து) – ஒரு கப், 

இட்லி மிளகாய்ப் பொடி, நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
சுவையான மினி வெஜ் ஊத்தப்பம் செய்வது எப்படி?

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கி… 

கோஸ் துருவல், கேரட் துருவல், உப்பு சேர்த்து மேலும் வதக்கி, இட்லி மாவில் சேர்த்து நன்கு கலக்கவும்.
ஆர்கானிக் க்ரில்டு சிக்கன் பிரெஸ்ட் வித் மஷ்ரூம் சாஸ் செய்வது எப்படி?
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் மாவை குட்டி குட்டி ஊத்தப்ப மாக (சற்று தடிமனாக) ஊற்றி, 

மேலே இட்லி மிளகாய்ப் பொடி தூவி, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, வெந்ததும் திருப்பிப் போட்டு, பொன்னிறமாக எடுக்கவும். சாஸ் உடன் பரிமாறவும்.
Tags: