அருமையான கோதுமை களி செய்வது எப்படி?





அருமையான கோதுமை களி செய்வது எப்படி?

தவிடு நீக்கப்படாத கோதுமையை உணவாகக் சாப்பிடுபவர்களுக்கு செலினியத்தில் அதிகம் நிறைந்திருக்கும் ஆன்டி - ஆக்ஸிடன்ட்டுகள் சத்துக்கள் 
அருமையான கோதுமை களி செய்வது எப்படி?
உடலில் உள்வாங்கப்பட்டு தோலை தளர்ந்து விடாமல் தடுத்து, தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் செய்து இளமையான தோற்றத்தை தருகிறது. கோதுமையில் ஜிங்க் சத்து அதிகம் உள்ளது. 

இந்த ஜிங்க் சத்து தலைமுடிக்கு பலம் தந்து, தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது. மேலும் தலைமுடிக்கு பளப்பளப்பு தன்மையையும் தருகிறது. கோதுமையில் வைட்டமின் பி சத்துக்கள் அதிகம் உள்ளன. 
எனவே கோதுமை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு, இந்த வைட்டமின் பி சத்து அதிகம் கிடைத்து நாள் முழுவதும் உடல் மற்றும் மனச்சோர்வு ஏற்படாமல் காக்கிறது. 

உடல் உறுப்புகளின் செயல்பாடு சீராக இருக்கவும் உதவுகிறது. அருமையான ருசியில் சரி இனி கோதுமை கொண்டு அருமையான கோதுமை களி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 1 கப்,

உப்பு - சிறிது,

எண்ணெய் - 1 டீஸ்பூன்,

தண்ணீர் - 3 கப்.

செய்முறை:

அருமையான கோதுமை களி செய்வது எப்படி?

அடிகனமான கடாயில் 2-1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொதிக்கும் தண்ணீரில் எண்ணெயும் சிறிது உப்பும் சேர்க்கவும். கோதுமை மாவினை 1/2 கப் தண்ணீரில் கரைத்து கொதிக்கும் நீரில் ஊற்றவும். 

நன்றாக வேக விடவும். கையில் தண்ணீர் தொட்டு களியில் கை வைத்தால் கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும். இந்த பதம் வந்ததும் இறக்கவும். சாம்பார், பொரியல், குழம்பு, ரசம், தயிர் பிசைந்து இதனை சாப்பிடலாம்.
குறிப்பு : 

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவு கோதுமை களி. இது உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
Tags: