சுவையான வெஜிடபிள் கொத்து பரோட்டா செய்வது எப்படி?





சுவையான வெஜிடபிள் கொத்து பரோட்டா செய்வது எப்படி?

0
காய்கறிகளின் தன்மை  வேறுபடுவதைப் பொருத்து, இவற்றை பச்சையாகவோ அல்லது சமைத்தோ பரிமாறலாம். 
சுவையான வெஜிடபிள் கொத்து பரோட்டா செய்வது எப்படி?
உணவுகளின் தன்மையிலும் தோற்றத்திலும் காய்கறிகளை உபயோகித்து மாறுதல் ஏற்படுத்தி, பின்னர் பரிமாறலாம். காய்கறிகள் பல்வேறு மணத்தை  கொண்டுள்ளன. 

சரியான மணமுள்ள காய்கறிகளை உபயோகப் படுத்தி தேவையான மணத்தை உணவில் பெறலாம். பச்சையிலை காய்கறிகள் ஊட்டச்சத்துகள் நிறைந்த விலை குறைந்த உணவுப் பொருளாகும். 

இவை 3- கரோட்டின், அஸ்கார்பிக் அமிலம், ஃபோலிக் அமிலம், கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துகளை அதிக அளவில் பெற்றுள்ளன. ஆனால் இவற்றில் புரதம் மிக குறைந்த அளவில் காணப்படுகிறது. 

சரி இனி இறால் மற்றும் குடைமிளகாய் கொண்டு சுவையான வெஜிடபிள் கொத்து பரோட்டா செய்வது எப்படி?  என்று பார்ப்போம்.
தேவையானவை :

தயாரித்த பரோட்டாக்கள் - 6

கேரட் - 2

தக்காளி - 2

பீன்ஸ் - 50 கிராம்

முட்டைகோஸ் - 100 கிராம்

உருளைக் கிழங்கு - 1

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

தனியாத் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 3 சிட்டிகை

பெரிய வெங்காயம் -1

பச்சை பட்டாணி (உரித்தது) - 50 கிராம்

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 50 மில்லி லிட்டர்

செய்முறை:
சுவையான வெஜிடபிள் கொத்து பரோட்டா செய்வது எப்படி?
பரோட்டாக் களை சமையலறை கத்தரிக் கோலால் (Kitchen Scissors), சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் அல்லது கையினால் பிய்த்துப் போட்டுக் கொள்ளவும்.

காய்கறி மஸாலா தயாரிப்பதற்கு: 

கேரட், உருளைக் கிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ் இவற்றை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். 
வாணலியில் 2 மேஜைக் கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.

அதன்பின் காய்கறிகள், பட்டாணி போட்டு வதக்கி, சிறிதளவு தண்ணீர் ஊற்றவும். தனியாத் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டுக் கிளறவும்.

காய்கறிகள் வெந்து, தண்ணீர் ஊற்றி கெட்டியானதும், மீதமுள்ள எண்ணெய் ஊற்றி பரோட்டா துண்டுகளைப் போடவும். பரோட்டா துண்டுகளும், காய்கறி மஸாலாவும் நன்றாக கலந்து வதங்கியதும் இறக்கி பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)