உண்மையில் பால் குடிப்பதால் ஏற்படும் பயன்கள் !

0

பால் மற்றும் பால் பொருட்களைச் சேர்த்துக் கொள்ளலாமா? என்று ஒரு பக்கம் விவாதம் நடந்தாலும், உண்ணும் உணவுப் பொருட்களிலேயே பால் மிகவும் இன்றியமையாத ஒன்று. 

உண்மையில் பால் குடிப்பதால் ஏற்படும் பயன்கள் !
தினசரி காலையில் காபி, மதிய உணவில் தயிர், வெப்பத்தைத் தணிக்க மோர், உணவின் சுவையைக் கூட்ட நெய் எனப் பால் பொருட்கள் இல்லாத நாளை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. 

குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் என அனைவரும் சாப்பிட ஏற்றது பால்.  பால் சுவையுடன் இருப்பதோடு, சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருளும் கூட. 

பாலில் நல்ல தரமான புரதம், கொழுப்பு, சிறிய அளவில் மாவுச்சத்து, மக்னீசியம் போன்ற பல விதமான சத்துக்கள் உள்ளன.

மற்ற பொருட்களில் இல்லாத சில சத்துக்கள் பாலில் உள்ளதால் நாம் எல்லோரும் 500 மி.லி. அளவு பாலைக் கண்டிப்பாக தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுருத்துக்கின்றனர்.

கால்சியம் குறைபாடு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள?

ஆனால். நம்மில் எத்தனை பேர் தினமும்  பால்  குடிப்பதை பழக்கமாக வைத்திருக்கிறோம்.  குழந்தைகளில் தொடங்கி பெரியவர்கள் வரை பலரும் பால் குடிப்பதை  அதிகம் விரும்புவதில்லை. 

குறிப்பாக பெண்கள், பால் குடித்தால் குண்டாகி விடுவோம், முகப்பரு வந்து விடும் என்று பல காரணங்களை காட்டி பால் குடிப்பதை தவிர்த்து வருகிறோம். 

பசும்பாலில் அனைத்து வித அமினோ அமிலங்களும் உள்ளன. ஆனால், புரதத்தின் அளவு குறைவு. கால்சியம், லாக்டோஸ் நிறைந்தது. இது உடலுக்குள் சென்று லாக்டிக் அமிலமாக மாறுகிறது.

லாக்டிக் அமிலம், உடலுக்குத் தேவையான புரதம், நார்ச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. வயிற்றுப் புண்ணின் வீரியத்தைக் குறைக்கிறது.

வளரும் குழந்தைகள், சிறுவர்களது எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. வயதானவர்களுக்கு எலும்பு தேய்மானம் அடைவதைத் தடுக்கிறது.

உண்மையில் பால் குடிப்பதால் ஏற்படும் பயன்கள் !

மாதவிடாய் நின்று விட்ட பெண்கள் கண்டிப்பாக 500 மி.லி. வரைக்கும் பால் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. இத்தகைய கால்சியம் வயது அதிகரிக்கும் போது குறைய ஆரம்பிக்கும்.  பாலில் உள்ள கால்சியம் உங்களின் உடலை பராமரிக்கும்.

இரத்தக் கொதிப்பு கட்டுப்பாட்டிற்கும், உடல் பருமன் குறைவதற்கும், இதய நோயிற்கும், புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளவர்களும் பாலை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

சிறுநீரக கற்கள் இருக்கும் நோயாளிகள் கூட பாலை அருந்தலாம். பாலில் வைட்டமின் பி12 உள்ளது. இந்த வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. 

தினமும் காலையிலும், இரவிலும் பால் குடிப்பதன் மூலம், வயிறு நிரம்பி ஆரோக்கியம் பெருகும்.

பாப்கார்ன் பற்றி அறிந்து கொள்வோமா?

தினமும் இரவில் ஒரு கப் பாலில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் வென்னிலா எசன்ஸ் சேர்த்து குடித்தால் நன்றாக தூக்கம் வரும் பாலில் பொட்டாசியம் உள்ளது. 

இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும். பாலை எப்போதும் காய்ச்சிக் குடிப்பதே சிறந்தது. 

அப்போது தான், அதில் உள்ள தொற்றுக்களும் பாக்டீரியாவும் கொல்லப்படும். அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கத் தேவை இல்லை. சில நிமிடங்கள் காய்ச்சினாலே போதும்.

உண்மையில் பால் குடிப்பதால் ஏற்படும் பயன்கள் !

கடையில் வாங்கியதும் உடனே பயன்படுத்துவது நல்லது. அவசியம் எனில், ஃப்ரிட்ஜில் வைத்து, பாக்கெட்டில் குறிப்பிட்டுள்ள நாள் வரை பயன்படுத்தலாம்.

முடிந்த வரை தேவையான போது வாங்கி, அப்போதே பயன்படுத்துவது நல்லது. நீண்ட நேரம் கொதிக்க விடுவதைத் தான் பால் காய்ச்சுவது எனப் பலரும் நினைக்கின்றனர். 

இறால் தயிர் பிரியாணி செய்முறை !

இது தவறு. நீண்ட நேரம் கொதிக்க விடும் போது, பாலில் உள்ள லேக்டால்புமின் எனும் வே புரோட்டின் உள்ளிட்ட சத்துக்கள் வெளியேறி விடும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)