தேவையானவை:

கோதுமை மாவு,

பால் – தலா 2 கப்,

பொடியாக நறுக்கிய ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் (மூன்றும் சேர்த்து) – 2 கப்,

வறுத்த முந்திரி, திராட்சை – தலா 10,

சர்க்கரை – 4 டேபிள்ஸ்பூன்,

நெய் – 2 டீஸ்பூன்,

உப்பு – ஒரு சிட்டிகை,

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

ஃப்ரூட்ஸ்  நட்ஸ் பூரி

கோதுமை மாவுடன் நெய், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்து, சிறு பூரிகளாகத் திரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பாலை சுண்டக் காய்ச்சி, சர்க்கரை சேர்த்து, கரைந்ததும் இறக்கி ஆற விடவும். பிறகு, அதில் பொடியாக நறுக்கிய பழத்துண்டுகள், முந்திரி, திராட்சை சேர்த்து, பூரி மீது ஊற்றி சாப்பிடக் கொடுக்கவும்.