பனீர் வெஜ் ரோல்ஸ் செய்முறை / Paneer Veg Rolls !





பனீர் வெஜ் ரோல்ஸ் செய்முறை / Paneer Veg Rolls !

தேவையானவை:

சப்பாத்தி – 8,

துருவிய பனீர் – 200 கிராம்,

குடமிளகாய், பெரிய வெங்காயம் – தலா ஒன்று,

வெங்காயத்தாள் – 4,

சீரகத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,

ஆம்சூர் பொடி – கால் டீஸ்பூன்,

கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,

பொடி யாக நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிதளவு,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

பனீர் வெஜ் ரோல்ஸ்

குடமிளகாய், பெரிய வெங்காயம், வெங்காயத் தாள் ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும்.

வாணலி யில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் முதலில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு குடமிளகாய், கேரட் துருவல் சேர்த்து வதக்கவும். துருவிய பனீரை அதனுடன் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

அதில் சீரகத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி… கொத்தமல்லித் தழை, ஆம்சூர் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால்… ஃபில்லிங் ரெடி.

சப்பாத்தி யின் நடுவில் இந்த ஃபில்லிங்கை நீளவாக்கில் நிரப்பி, பொடியாக நறுக்கிய வெங்காயத் தாளை மேலே தூவி நன்கு இறுக்கமாக சுருட்டி,

அலுமினிய பாயில் (அ) பட்டர் பேப்பரில் வைத்து சுருட்டி… லஞ்ச் பாக்ஸில் போட்டு கொடுத்து அனுப்பலாம்.
Tags: