தேவையானவை:
கோதுமை மாவு – 2 கப்,
தேன் – தேவையான அளவு,
கறுப்பு எள் – ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய் – 2 டீஸ்பூன்,
எண்ணெய், நெய் கலவை – தேவையான அளவு,
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை:
கோதுமை மாவுடன் தேன், நெய், எள், உப்பு சேர்த்துக் கலந்து தேவையான நீர் தெளித்து நன்கு பிசைந்துகொள்ளவும்.
மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் – நெய் கலவையை சுற்றிலும் ஊற்றி, வேகவிட்டு எடுக்கவும்.