காராமணி கீரைத்தண்டு குழம்பு செய்முறை / Cowpea Curry Kiraittantu Recipe !





காராமணி கீரைத்தண்டு குழம்பு செய்முறை / Cowpea Curry Kiraittantu Recipe !

கிராமங்களில் அடிக்கடி செய்யப்படும் இந்த காராமணி கீரைத்தண்டு குழம்பு மணமும், ருசியும், மருத்துவ குணமும் நிறைந்த உணவு வகையாகும். காரா மணியை தட்டப்பயிர் என்றும் கூறலாம்.

காராமணி கீரைத்தண்டு குழம்பு

மருத்துவ குணங்கள் :

நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவானது காராமணியில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும், வயிற்றுப் புற்றுநோயை தடுக்கும், வளரும் குழந்தைகளுக்கு மிகவும் உகந்தது,

உடல் எடையைக் குறைக்கவும், மூளையின் செயல் பாட்டை சீராக வைக்கவும்,

உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கவும், சிறுநீரக பிரச்சனை மற்றும் வயிற்று உபாதைகளை போக்கவும்,

இதயம் சம்பந்தமான நோய்களை குணமாக்கவும் காராமணி உதவுகிறது.

தேவையான பொருட்கள் :

காராமணி - அரை கப்

தண்டுக் கீரை - 2 பெரிய தண்டு நறுக்கியது

பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)

முழு பூண்டு - 2

கடுகு, உளுந்து - 1 ஸ்பூன்

வெந்தயம் - அரை டீஸ்பூன்

புளி - நெல்லிக்காய் அளவு

மிளகாய் தூள் - 2 1/2 டீஸ்பூன்

தனியாத் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை :

காராமணியை சுத்தம் செய்து, வாணலியில் போட்டு அரை உப்பு சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். 

தண்டுக் கீரையின் பெரிய தண்டை எடுத்து பொடியாக நறுக்கி, உப்பு போட்டு வேக வைக்கவும்.

இதனிடையே, சூடான வாணலியில் எண்ணெ யிட்டு, கடுகு, உளுந்து, வெந்தயம், தாளித்து பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

காராமணி, கீரையை வேக வைத்த தண்ணீரில் புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

பின்னர் இந்த புளிக் கரைசலை வதங்கிய தக்காளியுடன் சேர்த்து கிளறவும். இத்துடன், மிளகாய்த் தூள், தனியாத் தூள், கொஞ்சம் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

பச்சை வாடை போகும் வரை கொதிய விட்டு, பூண்டை நசுக்கி குழம்பில் போடவும். இத்துடன் கறிவேப்பிலை, கொத்த மல்லி இலையை தூவி விடவும்.

கமகமக்கும் இந்த காராமணிக் குழம்பு இட்லி, தோசை, ரொட்டி, சாப்பாடு என எல்லா வற்றுக்கும் பொருந்தும்.
Tags: