பைனாபிள் - செர்ரி ஜஸ்க்ரீம் செய்வது | Pinapple - Cherry Ice cream !





பைனாபிள் - செர்ரி ஜஸ்க்ரீம் செய்வது | Pinapple - Cherry Ice cream !

தேவையான பொருட்கள்: 

நறுக்கிய அன்னாசிப் பழம் - 1 கப்,

அன்னாசி எசென்ஸ் - 3 துளிகள்,

சர்க்கரை - 1 கப்,

க்ரீம் - 1/2 கப்,

கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்,

பால் - 1 கப்,

glazed செர்ரி - 8.

செய்முறை: 

கடாயில் அன்னாசியுடன் சர்க்கரை சேர்த்து, மிதமான தீயில் அன்னாசி மென்மையாகும் வரை வதக்கவும். 
பைனாபிள் - செர்ரி ஜஸ்க்ரீம்
பிறகு அதை ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும். பாலை காய்ச்சவும். கஸ்டர்ட் பவுடரை சிறிது பாலில் கரைத்து ஊற்றி, மிதமான தீயில் சுட வைக்கவும்.

பால் கெட்டியானவுடன் இறக்கி, ஆற வைக்கவும். இத்துடன் க்ரீம், அரைத்த அன்னாசிப் பழக்கூழ், எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
Tags: