குலாப் ஜாமூன் ஜஸ்க்ரீம் செய்வது | Gulab jamun Ice Cream !





குலாப் ஜாமூன் ஜஸ்க்ரீம் செய்வது | Gulab jamun Ice Cream !

தேவையான பொருட்கள்: 

பால் - 1/2 கப்,

விப்பிங் க்ரீம் - 3/4 கப்,

சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்,

வெனிலா எசென்ஸ் - 1/4 டீஸ்பூன்,

குலாப் ஜாமூன் - 8.

செய்முறை:

பாலை நன்கு காய்ச்சி ஆற வைக்கவும். இத்துடன் சர்க்கரை, வெனிலா எசென்ஸ், க்ரீம் சேர்த்து கரையும் வரை கலக்கவும்.

இறுக்கமான மூடி கொண்ட ஒரு ஃப்ரீசரில், டப்பாவில் ஊற்றி வைக்கவும். 1 மணி நேரம் கழித்து ஃப்ரீசரில் வைத்த கலவையை எடுத்து மிக்ஸியில் அரைக்கவும்.
குலாப் ஜாமூன் ஜஸ்க்ரீம்

ஹேண்ட் பிளெண் டரிலும் அரைக்கலாம். மறுபடியும் டப்பாவில் ஊற்றி, 1 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.

இதே போல் ஒரு மணி நேர இடை வெளியில் 4, 5 முறை அரைத்து வைத்தால் வழுவழு ப்பான ஐஸ்க்ரீம் கிடைக்கும். குலாப் ஜாமூனை ஒன்றிர ண்டாக மசிக்கவும்.

கடைசி முறை ஐஸ்க்ரீம் கலவையை அரைத்த வுடன் மசித்த குலாப் ஜாமூனை கலந்து விடவும். கலவையை கலக்கி மறுபடியும் ஃப்ரீசரில் பரிமாறும் வரை வைக்கவும்.
Tags: