கடுகு குழம்பு செய்முறை / Mustard Sauce Recipe !

கடுகு குழம்பு செய்முறை / Mustard Sauce Recipe !

தேவையான பொருள்கள் :

கடுகு - 40 கிராம்

சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகு- 1 தேக்கரண்டி

பால் பெருங்காயம் - 1 தேக்கரண்டி

மல்லி விதை - 50 கிராம்

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிதளவு

புளி - எலுமிச்சையளவு

சின்ன வெங்காயம் - 1 கையளவு

பூண்டு - 1 கையளவு

நல்லெண்ணெய் - 4 மேசை கரண்டி

கருவேப்பிலை - 2 கொத்து

கல் உப்பு - தேவைக்கு

செய்முறை : 

கடுகை சிவக்க வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும். சீரகம், மிளகு, பெருங் காயம், மல்லி விதை,

கடுகு குழம்பு

வெந்தயம் இவை அனைத் தையும் தனித் தனியாக எண்ணெயி ல்லாமல் சிவக்க வறுத்து, சின்ன வெங்கா யம், பூண்டுடன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த கலவை யுடன் புளிக் கரைசலும் மஞ்சள் தூளும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

நன்கு கொதித்து சிறிதளவு சுண்டி, பச்சை வாசனை போன நிலையில், கடுகுப் பொடியை சேர்த்துக் கலக்கவும்.

(கடுகை சேர்த்த பின் கொதிக்க விடக் கூடாது) சூடான எண்ணெயில் கருவேப் பிலை தாளித்து குழம்பி ற்குள் ஊற்றவும்.

பிரசவித்த தாய்மா ர்களுக்கு புழுங் கலரிசி சோற்றுடன் இக்கு ழம்பை கொடுக்க லாம்.

பிரசவத்து க்குப் பிறகு மூக்க ரட்டை கீரை வதக்கலும் தாய்மார்க ளுக்குக் கொடுப்பது நல்லது.

மூக்கரட் டையில் எல்லாமே மருந்தாக உள்ளது. இதன் வேரைக் கஷாய மாக்கிக் குடித்தால் வாயுப் பிடிப்பு நீங்கும். 

மூக்கரட்டை வேரை சாம்பார், கஞ்சி போன்ற உணவு களில் பயன் படுத்துவ தன் மூலம் வாயுத் தொல்லை யைத் தவிர்க்க முடியும்.

உடலுக்கு இது நல்ல நோய் எதிர்ப் பாற்றலைக் கொடுக்கும்.
Tags: