பின் வீல் குக்கீ செய்வது | Pinwheel Cookies !





பின் வீல் குக்கீ செய்வது | Pinwheel Cookies !

தேவையான பொருள்கள் :

கோதுமை மாவு - 1 கப்,

ஐசிங் சுகர் - 1/2 கப்,

வெண்ணெய் - 1/2 கப்,
கார்ன்ஃப்ளோர் - 1 டேபிள் ஸ்பூன்,

பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்,
வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்,

ரெட் ஃபுட் கலர் - 1/2 டீஸ்பூன்.

செய்முறை :

கோதுமை மாவு, கார்ன்ஃப்ளோர் மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து இரண்டு முறை சலிக்கவும். வெண் ணெயை பீட்டர் அல்லது விஸ்க் கொண்டு நன்கு நுரைக்க அடித்து, பின்பு அதனுடன் ஐசிங் சுகர்   

மற்றும் வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு நுரைத்து வரும் வரை அடிக்கவும். இப்பொழுது சலித்து வைத்துள்ள மாவுக் கலவை சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும். மாவை இரண்டு பாதியாக பிரித்துக் கொள்ளவும். 
பின் வீல் குக்கீ
ஒரு பாதியில் ரெட் கலரை சேர்த்து நன்கு பிசையவும். இப்போது இரண்டு மாவுக ளையும் தனித் தனியாக பிளாஸ்டிக் கவரில் சுற்றி ஃபிரிட்ஜில் 30 நிமிடங்கள் வைக்கவும்.
பின்பு மாவுகளை எடுத்து கோதுமை மாவு தூவி தனித் தனியாக 3 மி.மீ. அளவிற்கு தேய்த்துக் கொ ள்ளவும். தேய்த்த இரண்டு சப்பாத்தி களையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து நன்கு டைட்டாக உருளை வடிவில் சுருட்டிக் கொள்ளவும். 

பின்பு 1/2 இன்ச் துண்டு களாக குறுக்காக கட் செய்யவும். இப்போது குக்கீயை பார்த்தால் இரண்டு கலர் வீல்கள் ஒன்றுக்குள் ஒன்று இருப்பது போல தோன்றும். 

1 பேக்கிங் டிரேயில் 1 இன்ச் இடைவெளி விட்டு அடுக்கி வைத்து, அவனை 200 டிகிரி ப்ரீ ஹீட் செய்யவும். 180 டிகிரி செல்சியசில் 10 நிமிடங்கள் பேக் செய்யவும். நன்கு ஆறிய பின்பு எடுத்து வைக்கவும்.
Tags: