ஷாஹி துக்ரா செய்வது | Shahi tukra !





ஷாஹி துக்ரா செய்வது | Shahi tukra !

தேவையான பொருள்கள் : -

பிரெட் - 10 ஸ்லைஸ் (ஓரங்கள் வெட்டி முக்கோண வடிவில் வெட்டவும்),

பால் - 5 கப்,

கிரீம் - 1 கப் (பாலாடை),

பொரிக்க எண்ணெய் - தேவைக்கு,

சர்க்கரை - 1 1/2 கப்,

குங்குமப்பூ - 1/4 டீஸ்பூன்,

சோளமாவு - 1/2 டீஸ்பூன் (1 டீஸ்பூன் தண்ணீரில் கரைத்து வைக்கவும்),

மஞ்சள் ஃபுட் கலர் - 1 துளி,

நறுக்கிய (முந்திரிப் பருப்பு, பாதாம், பிஸ்தா) - 5 டீஸ்பூன்.

சர்க்கரைப் பாகுக்கு...

சர்க்கரை - 1 கப்,

தண்ணீர் - 1/2 கப்,

ரோஜா பன்னீர் - 1/2 டீஸ்பூன்.

செய்முறை : -
ஷாஹி துக்ரா
பாகுக்கு கொடுத்துள்ளதை சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் அளவிற்கு கொதிக்க விட்டு இறக்கி ஆற விடவும். பால், கிரீம், சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்து பாதி அளவு ஆகும் வரை கொதிக்க விடவும். 

அதில் சோளமாவு கலவை, மஞ்சள் ஃபுட் கலர் சேர்த்து லேசாக கட்டி ஆகும் வரை கொதிக்கவிட்டு இறக்கி வைக்கவும்.

எண்ணெயை சூடாக்கி பிரெட் முக்கோணங்களை பொன்னிறமாக பொரித்தெடுத்து, சர்க்கரை பாகில் முக்கி வடித்து வைக்கவும். 

வடித்த பிரெட் முக்கோணங்களை ஒரு தட்டில் அடுக்கி அதன் மேல் பால் கலவையை ஊற்றவும். நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரியை மேலே தூவி சூடாகவோ, ஜில்லென்றோ பரிமாறலாம்.
Tags: