பச்சை மாங்காய் ஜூஸ் செய்வது | Green mango juice !





பச்சை மாங்காய் ஜூஸ் செய்வது | Green mango juice !

தேவையான பொருள்கள் : -

தோல் நீக்கி நறுக்கிய மாங்காய் - 1,

சீரகத் தூள் - 1 டீஸ்பூன்,

மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்,

நறுக்கிய புதினா இலை - 1 டேபிள்ஸ்பூன்,

உப்பு - 1 டீஸ்பூன்,

சர்க்கரை - 7 டீஸ்பூன்,

கருப்பு உப்பு - சிறிது,

ஐஸ்கட்டி - 12,

ஐஸ் தண்ணீர் - 2 கப்.

செய்முறை  :-
பச்சை மாங்காய் ஜூஸ்
நறுக்கிய மாங்காயில் 2 கப் தண்ணீர் சேர்த்து 1 விசில் அளவுக்கு குக்கரில் வேக விட்டு ஆற விடவும். 

ஆறிய மாங்காயை நன்றாக அரைக்கவும். இதனுடன் சீரகத் தூள், மிளகாய் தூள், சர்க்கரை, உப்பு, கருப்பு உப்பு, புதினா, ஐஸ் தண்ணீர், ஐஸ் கட்டிகளை சேர்த்து நன்றாக கலக்கி ஜில்லென்று பரிமாறவும்.
Tags: