கேரட் பொரியல் செய்முறை / Carrot Fries Recipe !





கேரட் பொரியல் செய்முறை / Carrot Fries Recipe !

தேவையான பொருள்கள் :

கேரட் - கால் கிலோ

உப்பு - அரை தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

சீரகம் - அரை தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - இரண்டு

உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி

கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி

வெங்காயம் - அரை பாகம்

கறிவேப்பிலை - சிறிது

பச்சை மிளகாய் - ஒன்று

கொத்தமல்லி தழை - சிறிது

தேங்காய் துருவல் - மூன்று மேசைக்கரண்டி

செய்முறை :

முதலில் கடலைப்பருப்பை ஊற வைக்கவும்.
கேரட் பொரியல்

கேரட்டை பொடியாக நறுக்கி அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும். தேவையான உப்பு சேர்த்து கலந்து விட்டு மூடி போட்டு வேகவிடவும்.

வெந்ததும் அதிலேயே தண்ணீரை சுண்ட விட்டு இறக்கவும். தண்ணீரை வடித்தால் அதில் உள்ள சத்து போய் விடும். ஒரு வாணலியை காய வைத்து அதில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, ஊறிய கடலை பருப்பு போட்டு தாளித்து

பின் அரை வெங்காயத்தை பொடியாக அரிந்து போட்டு கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பிறகு வேக வைத்துள்ள கேரட், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி போட்டு, தேங்காய் துருவலும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையானா கேரட் பொரியல் ரெடி.
Tags: