சுவையான ப்ரைட் ரைஸ் செய்வது எப்படி?





சுவையான ப்ரைட் ரைஸ் செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்:

பாசுமதி அரிசி : 1 கப்

முட்டை கோஸ் : 1/4 கிலோ (பொடியதாக நீள வாக்கில் நறுக்கவும்)

கேரட் : 1 (பொடியதாக நறுக்கவும்)

வெங்காயத் தாள்: 5 (பொடியதாக நறுக்கவும்)

கொடைமிளகாய் : 1 (சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்)

வெங்காயம்: 1 சிறியது ( நீளவாக்கில் நறுக்கியது)

பீன்ஸ் : 10 (பொடியதாக நறுக்கியது)

மிளகு தூள்: சிறிதளவு

சோயா சாஸ் : 2 தே. கரண்டி

அஜினமோட்டோ: 1 1/2 தே. கரண்டி

உப்பு தேவையான அளவு

எண்ணை 1/4 கப்

முட்டை : 2

செய்முறை :

பாசுமதி அரிசியை நன்கு களைந்து ஒரு தே. கரண்டி எண்ணையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும்.
சுவையான ப்ரைட் ரைஸ் செய்வது எப்படி?

வெந்த பின் வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி நன்றாக ஆற விடவும். உதிரி உதிரியாக இருக்க வேண்டும். முக்கால் பாகம் வெந்தால் போதும்.

முட்டையில் 2 தே.கரண்டி எண்ணை, உப்பு, மிளகு தூள் சேர்த்து பொரித்து தனியாக வைக்கவும். கனமான பாத்திரத்தில் சிறிது எண்ணை விட்டு வெங்காயம், முட்டைகோஸ், கேரட், வெங்காயத் தாள்,

குடை மிளகாய், பீன்ஸ் ஆகிய வற்றை போட்டு வதக்கி மூடி வைக்கவும். (தண்ணீர் விடக் கூடாது). சிறிது நேரத்திற்கு பின் சோயா சாஸ், அஜினமோட்டோ, உப்பு இவற்றை சேர்த்து கிளறி உடன் சாதத்தையும் போட்டு கிளற மூடி வைக்கவும்.

சிறிது நேரத்திற்கு பின் பொரித்த முட்டையை போட்டு கிளரி விடவும். சுவையான வெஜிடபில் ப்ரைட் ரைஸ் ரெடி.
Tags: