வான் கோழிக் குழம்பு செய்முறை / Turkey gravy !





வான் கோழிக் குழம்பு செய்முறை / Turkey gravy !

தேவையான பொருள்கள் :

வான் கோழி - ஒரு கிலோ

வெங்காயம் - கால் கிலோ

தக்காளி - 150 கிராம்

இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

தயிர் - கால் கப்

மல்லித் தூள் - 2 தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - ஒன்றரைத் தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி

மல்லித் தழை - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
வான் கோழிக் குழம்பு

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கரம் மசாலா தூள் போட்டு, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி குழைய வதங்கியதும், உப்பு மற்றும் தூள் வகைகளைச் சேர்த்துக் கிளறவும்.

பிறகு தயிர் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும். நன்கு கிளறிவிட்டு வான் கோழித் துண்டுகளைச் சேர்க்கவும்.

அத்துடன் தேவையான அளவு வெந்நீர் ஊற்றி வேக வைக்கவும். 40 நிமிடங்கள் கழித்து வெந்ததை சரிபார்த்து மல்லித் தழை தூவி இறக்கவும்.

சுவையான வான் கோழிக் குழம்பு தயார்.
Tags: