ஃப்ரூட் சாலட் ஐஸ்க்ரீம் செய்முறை / Fruity Salad Ice Cream Recipe !





ஃப்ரூட் சாலட் ஐஸ்க்ரீம் செய்முறை / Fruity Salad Ice Cream Recipe !

தேவையான பொருட்கள்: 

ஸ்ட்ராபெர்ரி துண்டுகள் - 1/4 கப்,

திராட்சை - 2 டீஸ்பூன்,

ஆப்பிள் துண்டுகள் - 1/4 கப்,

அன்னாசி பழம் - 2 டீஸ்பூன்,

ஆரஞ்சு துண்டுகள் - 3 டீஸ்பூன்,

வேஃபர் பிஸ்கெட் - 4,

செர்ரி - 2,

வெனிலா ஐஸ்க்ரீம் - 1/2 கப்,

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் - 1/2 கப்.

செய்முறை:
ஃப்ரூட் சாலட் ஐஸ்க்ரீம்
ஒரு பாத்திரத்தில் அனைத்துப் பழத் துண்டுகளையும் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

அதை ஒரு அகலமான கிண்ணத்தில் போடவும்.

அதன் மேல் வெனிலா ஐஸ்க்ரீம், ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் இரண்டையும் வைத்து வேஃபர் பிஸ்கெட்டு களுடன் பரிமாறவும்.
Tags: