பேரீச்சை வித் காபி மில்க் ஷேக் செய்முறை | Dates with Cofee Milk Shake Recipe !





பேரீச்சை வித் காபி மில்க் ஷேக் செய்முறை | Dates with Cofee Milk Shake Recipe !

0
பேரீச்சை யின் இனிப்பும் புதிதாக வறுக்கப்பட்ட காபியின் வாசனை யும் ஒன்று சேரும் சூப்பராக இருக்கும். 
பேரீச்சை வித் காபி மில்க் ஷேக்
இப்போது பேரீச்சை வித் காபி மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கொட்டை இல்லா பேரீச்சை – 1 கப்

உடனடி காபி பவுடர் – 10 தேக்கரண்டி

பால் – 6 கப்

பச்சை ஏலக்காய் – 6

சர்க்கரை – 3 டீஸ்பூன்

புதிய கிரீம் – ¾ கப்

ஐஸ் க்யூப்ஸ் – தேவையான அளவு

செயல்முறை :
* பேரீச்சை பழங்களின் கொட்டை களை நீக்கி அதை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

தண்ணீர் கொதித்த வுடன் காபி பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.

* அடுப்பில் உள்ள காபி டிகாஷனுடன் சர்க்கரை, பச்சை ஏலக்காய் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

சர்க்கரை நன்றாக கரையும் வரை காத்திருக் கவும். அதன் பின்னர் அடுப்பை அணைத்து சூடு ஆறும் வரை வைத்திருக் கவும்.

* மிக்ஸியில் பேரீச்சை களை போட்டு அதனுடன் சிறிது பால் சேர்த்து நன்கு அரைக்கவும்.

* அடுத்து இதனுடன் ஐஸ் க்யூப்ஸ், ஆறவைத்த காபி டிகாஷன், பால் மற்றும் புதிய கிரீம்

போன்ற வற்றை சேர்த்து மீண்டும் நன்கு நுரை வரும் வரை அடிக்கவும்.

மிக்ஸியில் போட்டுள்ள பொருட்கள் நன்கு கடையப்பட்டு ஒன்று சேரும் வரை கலக்கவும்.
* ஒரு உயரமான கண்ணாடி டம்ளாரில் இந்த மில்ஷேக்கை ஊற்றி அதன் மீது சிறிது காபி டிகாஷன் விட்டு மில்க் ஷேக்கை அலங்கரிக்கவும்.

* இப்பொழுது பேரீச்சை வித் காபி மில்க் ஷேக் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)