மணமணக்கும் மதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி செய்வது எப்படி?

மணமணக்கும் மதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி செய்வது எப்படி?

0
பொட்டுக் கடலையை பொறுத்தவரை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக் கூடியது தான். கர்ப்பிணிகளுக்கும் ஏற்ற உணவு. சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்ற உணவு. 
மணமணக்கும் மதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி செய்வது எப்படி?
குழந்தைகளுக்கும் ஏற்ற உணவு. வைட்டமின் A, B1, B2, B3, கால்சியம், பொட்டாசியம் நிறைந்த இந்த பொட்டுக்கடலை குறைந்த அளவு கலோரிகளை கொண்டது. 

ஊட்டச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்த கடலை என்பதால், உடல் எடை குறைப்பவர்கள் தாராளமாக வறுத்த பொட்டுக் கடலையை சாப்பிடலாம். 

சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடும் போது, குளுக்கோஸ் ஏற்ற இறக்கத்தை சீராக்குகிறது. வெறும் ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை சாப்பிட்டாலே, பெண்களுக்கு கிடைக்கும் பிரத்யேக நன்மைகள் ஏராளம். 
வறுத்த பொட்டுக் கடலையில் நிறைய செலினியம் காணப்படுகிறது. இது டிஎன்ஏ சேதத்தை குறைப்பதற்கும் தனிநபர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கும், புற்றுநோய்களின் அபாயத்தை குறைப்பதற்கும் பேருதவி புரிகிறது.

இட்லி, தோசையின் சுவையை கூட்டும் மதுரை தண்ணி சட்னியை வீட்டிலேயே மிகவும் எளிய முறையில் தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள் . :

பொட்டு கடலை - ¼ கப்

பச்சை மிளகாய் - 4 

பூண்டு பல் - 4 

வெங்காயம் - 1 

கொத்தமல்லி - 1 கொத்து 

கடுகு - ¼ ஸ்பூன் 

உளுந்து - 1 ஸ்பூன் 

கறிவேப்பிலை - 1 கொத்து 

காய்ந்த மிளகாய் - 2  

உப்பு, எண்ணெய் - போதுமான அளவு

சொந்த மண்ணில் என்.ஆர்.ஐ.களுக்கு வீட்டுக் கடன் !

செய்முறை . : 

மணமணக்கும் மதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி செய்வது எப்படி?

முதலில் கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் பொட்டு கடலையை எண்ணெய் இல்லாமல் சேர்த்து பதமாக வறுத்து இறக்கி நன்கு ஆற விடவும்.

இதனிடையே எடுத்துக் கொண்ட பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 

பின் கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கி, அடுப்பில் இருந்து இறக்கி நன்கு ஆற விடவும். 

பின் இந்த சேர்மத்தை மிக்ஸி ஜார் ஒன்றில் சேர்க்கவும். தொடர்ந்து இதனுடன் கொத்தமல்லி, உப்பு, பொட்டு கடலை சேர்த்து நன்கு விழுதாக அரைத்து தனி ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

வேக வைத்த முட்டைக்கோஸ் நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் ! 

பின் இதற்கு தாளிப்பு கொடுக்க கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடேற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் இதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

தயாராக அரைத்து வைத்த சட்னியுடன் போதுமான அளவு தண்ணீர் மற்றும் இந்த தாளிப்பினை சேர்த்து கரைத்து விட சுவையான தண்ணி சட்னி ரெடி!

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)