முள்ளங்கி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

முள்ளங்கி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

0

முள்ளங்கியில் விட்டமின் சி, இ, பி6, ஃபோலேட்டுகள் அதிகளவு காணப்படுகிறது. இதில் விட்டமின் ஏ, கே, பி2, பி5 (நியாசின்) ஆகியவை காணப்படுகின்றன. முள்ளங்கி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், பொட்டாசியம் போன்றவை உள்ளன. 

மேலும் இதில் குறைந்த எரிசக்தி, கார்போ ஹைட்ரேட், புரதச்சத்து, அதிகளவு நார்சத்து போன்றவை காணப்படுகின்றன. 

முள்ளங்கியை உண்ணும் போது அவை குறைந்த அளவு எரிசக்தியுடன் வயிறு நிரம்பிய உணர்வினை ஏற்படுத்துகின்றது. இக்காயில் நார்சத்து மற்றும் அதிகளவு நீர்ச்சத்தும் உள்ளது. 

எனவே உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு இக்காய் சிறந்த தேர்வாகும். முள்ளங்கியில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளது. முள்ளங்கி வாசம் சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். 

ஆனால் அதில் அடங்கியுள்ள மருத்துவ குணங்களைக் கேட்டால் நிச்சயம் பிடிக்கும். முள்ளங்கியில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இதனால் செரிமானம் மேம்படும். 

முள்ளங்கியை சாப்பிடுவது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. முள்ளங்கிக்கு உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் ஆற்றல் உள்ளது. 

பாலியல் கொடுமையால் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய பெண் !

இது சிறுநீரகத்தை சுத்தப் படுத்துகிறது. இதனால் சிறுநீர்ப் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கப்படும். முள்ளங்கியில் அதிக பொட்டாசியம் இருப்பதால் ரத்த நாளங்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கிறது. 

இதனால் பீபி கட்டுக்குள் இருக்கும். முள்ளங்கிக்கு சுருங்கிப் போன காற்றுக் குழாய்களை விரிவடையும் திறன் உள்ளது. 

இதனால் ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் பிரச்னைகள் தீரும். குளிர்காலத்தில் முள்ளங்கி சாப்பிட்டால் சளி மற்றும் சுவாசம் தொடர்பான தொற்றுகளில் இருந்து விடுபடலாம்.

முள்ளங்கி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

முள்ளங்கி இதய நோய்களைப் போக்கும் முக்கியக் காரணியாக விளங்குகிறது. முள்ளங்கியில் வைட்டமின் ஏ,சி,ஈ, கே உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு முள்ளங்கி நல்ல பலனைத் தரும். முள்ளங்கி சாறை தினமும் அருந்தி வந்தால் அதில் உள்ள வைட்டமின் சி சருமத்தைப் பொலிவாக்கும். முகப்பருக்கள், அரிப்புகளைத் தடுக்கும். 

காலையில் எழும் போது ஏன் வாய் துர்நாற்றம் வீசுகிறது?

முள்ளங்கி பேஸ்ட்டை முகத்தில் பூசினால் நல்ல கிளென்சராகப் பயன்படும். இறந்த செல்களை நீக்குகிறது. முள்ளங்கியை சாம்பார், ஊறுகாய், பச்சடி, கூட்டு என பல விதமாக செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)