மணக்க மணக்க ருசியான எள்ளு பொடி செய்வது எப்படி?

மணக்க மணக்க ருசியான எள்ளு பொடி செய்வது எப்படி?

0

சிறு தானிய வகைகளில் ஒன்றான எள்ளு, சத்து மிகுந்த ஒரு உணவுப் பொருள். நம் உணவில் பயன்படும் நல்லெண்ணெயின் மூலப் பொருள் இந்த எள்ளு தான். 

மணக்க மணக்க ருசியான எள்ளு பொடி செய்வது எப்படி?
எள்ளுருண்டை, எள்ளு சாதம் என பல வடிவங்களில் எள்ளை உணவாக எடுக்கும் நடைமுறை இருக்கிறது. பொதுவாக இட்லி தோசை சாப்பிடும் போது அந்த இடத்தில் இட்லி பொடி இருந்தால் ஒரு தனி ஆனந்தம் தான். 

குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இட்லி பொடி அந்த பொடியில் பூண்டு பொடி, தேங்காய் பொடி என எத்தனை வகைகள் இருந்தாலும் எள்ளு இருந்தால் தனி ருசிதான்.

அந்த வகையில் எள்ளுப் பொடியும் முக்கியமானது. எள்ளுப் பொடி வீட்டில் இருந்தால், இட்லி, தோசைக்கு அவசர நேரங்களில் வேறு சைட் டிஷ் தேட வேண்டாம். 

உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள் !

இட்லி, தோசை மட்டுமல்ல, சப்பாத்தி, புரோட்டாவுக்கு கூட எள்ளுப் பொடி உசிதமானதே! சாதத்திற்கு கூட்டாகவும் எள்ளுப் பொடியை பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள் . :

கருப்பு உளுந்து – 200 கிராம், 

கருப்பு எள்ளு – 150 கிராம், 

கறிவேப்பிலை – 1 கைப்பிடி அளவு, 

வரமிளகாய் – 15, 

பெருங்காயம் கட்டி – 2 பின்ச், 

தேவையான அளவு உப்பு.

செய்முறை . :

மணக்க மணக்க ருசியான எள்ளு பொடி செய்வது எப்படி?

ஒரு கடாயை அடுப்பில் வைத்து நன்றாக சூடு செய்து கொள்ளுங்கள். அந்த கடாய் சூடானதும் முதலில் கருப்பு எள்ளை அதில் கொட்டி வறுத்து எடுக்க வேண்டும். எள்ளு கருகி விடக்கூடாது. 

எள்ளு கடாயில் கொட்டியதும் படபடவென பொரியும். நன்றாக பொரிந்து வந்தவுடன் அதை ஒரு தட்டில் உடனடியாக மாற்றி விடுங்கள். 

அடுத்தபடியாக கருப்பு உளுந்தை வறுத்து எடுக்க வேண்டும். கருப்பு உளுந்து நன்றாக வறுபட்டு பொன்னிறமாக மாறி, வாசம் வரும் வரை வறுக்க வேண்டும். 

(getCard) #type=(post) #title=(You might Like)

ஒரு உளுந்தை எடுத்து வாயில் போட்டு அதை மென்று சாப்பிடும் அளவிற்கு பக்குவம் வர வேண்டும். அடுத்தபடியாக கருவேப்பிலையை கடாயில் போட்டு கருவேப்பிலை மொறு மொறுவென வரும் அளவிற்கு வறுத்துக் கொள்ள வேண்டும். 

இறுதியாக வரமிளகாயுடன், கல் உப்பை சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள். கடாயில் இருக்கும் சூட்டில் பெருங்காய கட்டிகளை போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வறுத்த எல்லா பொருட்களையும் ஒரே தட்டில் கொட்டி சூடு ஆற வைத்து விடுங்கள். இந்த பொருட்கள் அனைத்தும் சூடு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும். 

அவ்வளவு தான். உடலுக்கு ஆரோக்கியம் தரும் எள்ளு பொடி தயார். இதை ரொம்பவும் நைசாக அரைத்துக் கொள்ள கூடாது. ரொம்பவும் கொர கொரப்பாக அரைத்து கொள்ள கூடாது. 

இந்தப் பொடியை இட்லி தோசைக்கு நல்லெண்ணெய் ஊற்றி குழைத்து தொட்டுக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் எள்ளு சாதம் செய்யவும் பயன் படுத்திக் கொள்ளலாம். 

அதாவது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய் தாளித்து வடித்து ஆற வைத்த சாதத்தை கடாயில் கொட்டி, மேலே எள்ளுப் பொடியைத் தூவி, கலந்து கலவை சாதமாகவும் சாப்பிடலாம். 

அது உங்களுடைய விருப்பம். புளி சாதம் செய்யும் போது இரண்டு ஸ்பூன் அளவு இந்தப் பொடியை அந்த புளி சாதத்தோடு கலந்து விட்டாலும் அட்டகாசமான புளி சாதம் கிடைக்கும். 

பால் கொடுக்கும் போது கோபப்பட்டால் விஷமாகும் பால் !

இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்களுடைய வீட்டிலும் ட்ரை பண்ணி பாருங்க.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)