கம கம சீரகத் துவையல் செய்வது எப்படி?





கம கம சீரகத் துவையல் செய்வது எப்படி?

0

சீரகம், நம் உணவில் அதிகம் சேர்க்கப்படும் பொருள் ஆகும். இது பசி உணர்வை தூண்டுகிறது. அதே நேரத்தில் இதை அதிகம் உணவில் சேர்ப்பதால், நமக்கு பாதிப்புகளும் அதிகம் இருக்கின்றன. 

கம கம சீரகத் துவையல் செய்வது எப்படி?
அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல சீரகத்தையும் அளவாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். தினமும் சீரக நீரை குடித்து வந்தால் நம்முடைய செரிமான மண்டலம் பலமாகும். 

சீராக தண்ணீர் செரிமான அமைப்பை மேம்படுத்துவதோடு வயிற்று வலி, வீக்கம், வாயு, அஜீரணம் உள்ளிட்ட சிக்கல்களில் இருந்து நிவாரணம் அளிக்கும். 

இதை தினமும் குடிப்பதால் வயிறு நன்கு சுத்தமாகும். குடல் புற்றுநோய் வராமல் தடுக்க சீரகம் உதவுகிறது. திராட்சைப் பழச்சாறுடன், சிறுது சீரகத்தைப் பொடித்து போட்டு பருகினால் ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். 

ஆட்டோபான் நெடுஞ்சாலையின் சாலை விதிகள் !

இரத்ததில் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளவும், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. உடல் சூட்டை தணித்து, ஆரோக்கியம் நிறைந்தது கம கம சீரகத் துவையல் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

தேவையான பொருட்கள் . :

சீரகம் - கால் கப்

இஞ்சி - சிறிதளவு 

சின்ன வெங்காயம் - 5

புளி - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 5

எண்ணெய் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை . :

கம கம சீரகத் துவையல் செய்வது எப்படி?

அடுப்பில் கடாய் வைத்து  எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாயை சேர்த்து வதக்கவும். 

அடுப்பில் இருந்து இறக்கி ஆற விட்டு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். 

சர்வதேச விண்வெளி நிலையத்தை நாமும் வானில் பார்க்கலாம் !

அவ்வளவு தான் கமகம சீரக துவையல் ரெடி. தேவைப்பட்டால் கடுகு, கறிவேப்பிலை, கடலைப் பருப்பு சேர்த்து தாளித்து சேர்க்கலாம். 

இந்த துவையலை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இது, பசியைத் தூண்டும், வாய்க்கசப்பு நீக்கும். உள்ளுறுப்புகளை சீராக்கி,ஜீரண சக்தியைத் தூண்டும்.

குறிப்பு :

சீரக விதைகளில் உள்ள அதிகப்படியான கார்மினேட்டிவ் விளைவு, ஏப்பங்களை அதிகளவில் ஏற்படுத்த காரணமாக அமைகின்றன. 

நமது உடலின் குடல் மற்றும் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் அதிகப்படியான வாயு மற்றும் வீக்கம், வாய் வழியாக வெளியேறும் நிகழ்வையே நாம் ஏப்பம் என்று சொல்கிறோம். 

இந்த செடிகளை எப்போதும் தொட்டு விடாதீர்கள் - மரணம் கூட நேரலாம் !

இந்த ஏப்பம், சிலருக்கு துர்நாற்றம் கொண்டதாகவும், சில தனிப்பட்ட சத்தங்களை கொண்டதாகவும் இருக்கும். 

ஏப்பம் விடுவது பெரிய பிரச்சினை அல்ல என்ற போதிலும், சில நேரங்களில் நம்மை அதிக சங்கடத்திற்கு உள்ளாக்கி விடும் என்பதை மறுக்க இயலாது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)