தலை முதல் கால் வரை காக்கும் அற்புத அவுரி பொடி !

தலை முதல் கால் வரை காக்கும் அற்புத அவுரி பொடி !

0

உள்ளுறுப்பு களுக்கும், சருமத்துக்கும், தலைமுடிக்கும் நன்மையை தரக்கூடிய இலை உண்டென்றால், அது அவுரி இலைகள் தான். நஞ்சையும் முறித்து, ஆயுளையும் கூட்டும் சக்தி படைத்தது இந்த அவுரி இலைகள்.

தலை முதல் கால் வரை காக்கும் அற்புத அவுரி பொடி !
கல்லீரல் பாதுகாப்பில் முதன்மையானது இந்த அவுரி இலைகள். மஞ்சள் காமாலை நோய்க்கு, இந்த அவுரி இலைகளை சுத்தம் செய்து, விழுதாக அரைத்து, வெள்ளாட்டுப் பாலில் கலக்கி, வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்தாலே போதுமாம். தீர்வு கிடைக்கும்.

அவுரி இலைகள்: 

குடல் பாதுகாப்புக்கு இந்த அவுரி இலைகள் பேருதவி புரிகின்றன. அஜீரணம் ஏற்பட்டால், இந்த அவுரி இலையை தண்ணீரில் மிளகு சேர்த்து, கொதிக்க வைத்து குடிக்கலாம்.

அல்லது, இந்த இலையை வேக வைத்து வதக்கி சாப்பிட்டாலும், அஜீரணம் நீங்குவதுடன், வயிறு சுத்தமாகும். வயிற்றிலுள்ள கிருமிகள், நுண்ணுயிர்கள் அழிந்து விடும். 

அத்துடன் மலச்சிக்கலும் தீரும் அவுரி இலையுடன், பெருங்காயம், மிளகு சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால், கீல்வாதம், வாயு போன்ற பிரச்சனைகளும் விலகும்.

சரும அலர்ஜி : 

தோல்களில் அலர்ஜி ஏற்பட்டு விட்டாலோ அல்லது தோல் நோய்கள் ஏற்பட்டு விட்டாலோ, அனைத்து விதமான சரும பிரச்சனைகளுக்கும் இந்த அவுரி இலைகள் மருந்தாகின்றன. 

தீயால் ஏற்பட்ட கொப்புளங்களை சரி செய்யவும் அவுரி பயன்படும். அவ்வளவு ஏன்? பாம்பு கடித்து விட்டாலும், இந்த அவுரி இலைகள் தான் உயிரை காக்கின்றன.

பச்சிலைகள் : 

இந்த இலைகளை பச்சையாக அரைத்து கட்டி, ஒரு உருண்டை வாயிலும் விழுங்க செய்து விட்டு, அதற்கு பிறகு மருத்துவ மனைக்கு அழைத்து செல்வார்கள். 

முதலுதவிக்காக இப்படி செய்வதால், பாம்பு கடித்தவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாம். பாம்புக்கடி மட்டுமல்ல, உடலில் வீக்கங்கள், கட்டிகள் இருந்தாலும் இந்த இலையை அரைத்து கட்டுவார்கள்.

பெண்களை பொறுத்த வரை, 2 விதங்களில் இந்த அவுரி இலைகள் உதவி புரிகின்றன. மாதவிடாய் நேரத்தில், முறையற்ற மாதவிடாய் இருந்தால், இந்த அவுரியை மருந்தாக பயன்படுத்தலாம். 

மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி, குப்பை மேனி உள்ளிட்ட மேலும் சில இலைகளை நிழலில் காயவைத்து, பொடி செய்து, மருந்தாக தருவார்கள். இதனால், முறையற்ற மாதவிடாய் சீராகும்.

பெண்கள் : 

தலை முதல் கால் வரை காக்கும் அற்புத அவுரி பொடி !
வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்தாலும், அவுரி வேர்கள் இதற்கு உதவுகின்றன. கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினைகள் இருந்தாலும், அதற்கும் இந்த இலைகள் உதவுகின்றன. 

ஆனால், உள்ளுக்குள் மருந்தாக எடுக்க வேண்டி யிருப்பதால், மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று, அதற்கு பிறகு பயன்படுத்த வேண்டும்.

இந்த அவுரி இலைகள் தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகின்றன. அதனால் தான், கூந்தல் வளர்ச்சிக்கு தயாரிக்கப்படும் தைலங்களில், இந்த அவுரி இலை, வேர், போன்றவைகள் மூலப்பொருட்களாக சேர்க்கப் படுகின்றன. 

குள்ளமாக இருந்தால் உடல் எடையைக் குறைக்க முடியாது ஏன் தெரியுமா?

குறிப்பாக, நீலி பிருங்காதி தைலம், நீலின் யாதி கிருதம், நீலி காதி தைலம் போன்றவற்றின் தயாரிப்புகளில் இந்த இலை, வேர்கள் பயன்படுத்தப் படுகின்றன.

அவுரி பொடி என்றே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. இது இளநரைக்கு மாற்றானது. கருமை நிறத்தை தரக்கூடியது. 

மருதாணி பொடியுடன் அல்லது மருதாணி இலையுடன் அரைத்து, தலைக்கு தடவி குளித்து வந்தாலே, தலைமுடி கருப்பாக மாறும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)