சாதாரண புளிக்கும், குடம் புளிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?





சாதாரண புளிக்கும், குடம் புளிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

0

குடம் புளி . : இந்த தாவரம் கர்சினியா கம்மி குட்டா என்றும் அழைக்கப் படுகிறது. இந்த தாவரத்தின் பழங்கள் உணவுப் பொருட்களில் ப்ளேவரிங் ஏஜெண்ட்டாக, பதப்படுத்தும் பொருளாக, உணவு பல்கி ஏஜெண்ட்டாக பயன்படுகிறது. 

சாதாரண புளிக்கும், குடம் புளிக்கும் உள்ள வித்தியாசம்என்ன?
ஏன் இதை நீங்கள் சட்னி, குழம்பு மற்றும் சூப் போன்ற உணவுகளின் கெட்டியான பதத்திற்கும் ருசிக்கும் கூட பயன்படுத்தி கொள்ளலாம். இதன் பழங்கள் 5 செமீ விட்டளவும் ஆரஞ்சு பழம் போன்று 6-8 வரையிலான செலைகளையும் கொண்டுள்ளது.

பழுக்காத இந்த பழம் பார்ப்பதற்கு பச்சை நிறத்தில் இருக்கும். பழுத்த வுடன் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இந்த பழம் மாறி விடும். 

தோற்றத்தை வைத்து சொன்னால் பார்ப்பதற்கு சின்ன பூசணிக்காய் போன்று காட்சியளிக்கும். லேசான இனிப்பு சுவையுடன் புளிப்பு சுவையையும் கொண்டு இருப்பது அற்புதமான ருசியாக இருக்கும்.

ஸ்கிப்பிங்‬ செய்தால் ஏற்படும் நன்மை ! 

குடம்புளியின் ஆரோக்கிய நன்மைகள் . :

தென்னிந்திய ‌சமையல்களில் புளியின் பயன்பாடு ‌அதிகம். நாம் அன்றாடம் உபயோகிக்கும் புளியை விட, அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது குடம்புளி. 

சுவைக்கு மட்டுமன்றி, உடல் நலத்திற்கும் சிறந்ததாக குடம்புளி இருக்கிறது. மலைப் பிரதேசத்தில் வளரும் குடம்புளி கேரள சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

கோக்கம் புளி, மலபார் புளி, பானை புளி, மீன் புளி, கொடம்புளி, சீமைக் கொறுக்காய் என பல பெயர்களில் இது அழைக்கப் படுகிறது. இதன் பழப் பகுதியை அப்படியே பயன்படுத்தலாம். 

நன்கு காய வைத்த குடம்புளியையும் சமையலுக்கு உபயோகிக்கலாம். குடம்புளி மிதமான புளிப்புத் தன்மை உடையது. இதில் அமிலத் தன்மை இருக்காது. 

சாதாரண புளிக்கும், குடம் புளிக்கும் உள்ள வித்தியாசம்என்ன?

இந்த குடம்புளியைக் கொண்டு சமைக்க, உணவு ருசியாக, மணமாக இருக்கும். சாதாரணமாக புளியைக் கரைத்து சமைப்பது போல் செய்ய முடியாது. 

உணவு கொதி நிலையில் இருக்கும் போது புளியை போட்டு பின் எடுத்து விட, புளிப்பு இறங்கி சுவை நன்றாக இருக்கும். புளி அசிடிட்டி உள்ளவர்களுக்கு ஆகாது. 

ஆனால், குடம் புளியில் அந்தப் பிரச்னை இல்லை. செரிமான பிரச்னைகள் உள்ளவர்கள் தினமும் குடம்புளியைக் கொண்டு சமைத்து சாப்பிட்டு வர, இரத்த சோகை, செரிமான கோளாறுகள் நீங்கும்.

அதீத பசியைக் கட்டுப்படுத்தும். குடம்புளியில் உள்ள அமிலம் மாரடைப்பு மற்றும் இதயக் கோளாறுகளை வராமல் தடுக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து மெல்லிய தோற்றத்தைத் தருகிறது. 

குண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா?

எடை குறைக்க விரும்புவோர் குடம்புளியை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வீக்கம் இருக்கும் இடத்தில் குடம்புளியோடு மஞ்சள் சேர்த்து பற்று போட வலி, வீக்கம் குறையும். சருமத்தை பொலிவாக வைத்திருக்கும். 

ஈரலைப் பாதுகாக்கும். குடம் புளியிலிருந்து தயாரிக்கப்படும் ஹோமியோபதி மருந்துகள் வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். உடல் தசைகளை வலுப்படுத்தும். 

நீரிழிவு பிரச்னைகளை சரி செய்யும். வாதம் உள்ளவர்களுக்கு குடம்புளியை கஷாயமாக வைத்துக் கொடுக்க நிவாரணம் கிடைக்கும்.

குடம்புளி தோலிலிருந்து எடுக்கப்படும் சாறு, வாதம் மற்றும் வயிற்று உபாதைகளைத் தீர்ப்பதோடு, மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. 

கால்நடைகளின் வாய் சார்ந்த பிரச்னைகளுக்கு குடம்புளி மருந்தாகப் பயன்படுகிறது. ரப்பர் மரத்திலிருந்து வடியும் பாலை கெட்டிப் படுத்த குடம்புளி உதவுகிறது. தங்கம், வெள்ளியை பளபளப்பாக மாற்ற உதவுகிறது.

சாதாரண புளி . :

சாதாரண புளிக்கும், குடம் புளிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

நமக்குத் தெரிந்தது, நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் இந்த சாதாரண புளி தான். குடம் புளி போல் இதிலும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. 

புளியில் வைட்டமின், கால்சியம், இரும்பு மற்றும் தாது சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலை சரி செய்யும். உடல் சூட்டை சீர் செய்து, கண் எரிச்சலைப் போக்கி, உடல் நலமாக்கும். சமையலில் இன்றிமையாததாக விளங்குகிறது.

புளியை நீரில், உப்பு சேர்த்து சுட வைத்து, இரத்தக் கட்டுகளின் மேல் பூசிவர இரத்தக் கட்டு குணமாகும். தேள் கொட்டிய விஷம் இறங்க, வலி போக, புளியுடன் சுண்ணாம்பு சேர்த்து, கடித்த இடத்தில் இட வேண்டும். 

வாய்ப்புண்கள் குணமாக, புளி கலந்த நீரில் அவ்வப்போது, வாயை கொப்புளித்து வரலாம். புளியங் கொட்டைகளை வறுத்தோ, வேக வைத்தோ உணவில் சேர்த்து வர, புரதக் குறைபாடுகள் நீங்கி, உடல் நலம் பெறும்.

சீயக்காயை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் !

புளியங் கொட்டைகளை தூளாக்கி, பாலில் சிறிது சேர்த்து, பனங்கற்கண்டு கலந்து பருகி வர, உயிர்த் தாது வளமாகும். புளிய இலைகளைப் போல, அதன் பூக்களும் நலம் தருபவை.

புளியம் பூவை துவையலாக செய்து சாப்பிட, தலைச்சுற்றல் மயக்கம் சரியாகும். கொழுந்தான புளிய இலைகளை வேக வைத்த பாசிப்பருப்பு டன் சேர்த்து, கூட்டு போல் செய்து சாப்பிட உடல் வலுவாகும். 

சாதாரண புளிக்கும், குடம் புளிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

புளியங் குச்சியைக் கொண்டு பல் துலக்கினால், பற்களின் கறைகளை போக்கும். இவ்வாறு நம்மூரு சாதாரண புளிக்கும் இத்தனை நன்மைகள் இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

குடம் புளி கேரளாவில் பயன்படுத்தப் படுகிறது. உடலுக்கு நல்லது என்கிறார்களே என்று நானும் சில நாட்கள் வாங்கி பயன்படுத்தினேன். அதன் சுவை பிடிக்கவில்லை.

கர்ப்பப்பையில் கட்டிகள் பரிசோதித்துக் கொள்வதே சிறந்தது !

"எந்த ஊரு என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா.."

என்பதற்கேற்ப மீண்டும் நமக்குத் தெரிந்த, அன்றாடம் பயன்படுத்தும் சாதாரண புளிக்கே மாறி விட்டேன்.

வேண்டுமானால் நீங்கள் குடம் புளியை பயன்படுத்திப் பாருங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)