கிழங்கா மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?

கிழங்கா மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?

0

மீன்கள்  பல்வேறு வகையான ஊட்டச் சத்துக்களை கொண்டுள்ளது. அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது கிழங்கா மீன் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கிழங்கா மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?
அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாத மீன் வகைகள் என்ன தெரியுமா?

கிழங்கா மீன்:

இந்த கிழங்கா மீன்கள் 2 வகைகளில் உள்ளன.

நாய்க் கிழங்கா மீன் அல்லது கருப்பு கிழங்கா மீன்

வெள்ளை கிழங்கா மீன்

நாய்க்கிழங்கா மீன் தடிமனாகவும், கருப்பு நிறம் கலந்தும் மற்றும் ஒரு அடி நீளத்திலும் இருக்கும். அதே போல், வெள்ளை கிழங்கா மீன் வெண்மை நிறத்திலும் ஒரு ஜாண் நீளத்திலும் இருக்கும். 

இந்த கிழங்கா மீனில் பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த மீனில் உள்ள சத்துக்கள் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

தாய்மார்களுக்கு வரும் முதுகு வலி, மூட்டு வலி போக்க !

கிழங்கா மீன் நன்மைகள்: 

இந்த கிழங்கா மீன் சாப்பிடுவதால் மூல நோய் பிரச்சனைகளை சரிசெய்ய பயன்படுகிறது. இது உடல் சூட்டை குறைக்க உதவுகிறது.

இந்த கிழங்கா மீனை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வருவதால் மூலம் போன்ற உபாதைகள் ஏற்படுவதை தடுக்கலாம்.

இந்த கிழங்கா மீன் அதிகளவு குளிர்ச்சி தன்மை உடையது. மூலநோய் உள்ளவர்கள்  கிழங்கா மீன் சாப்பிட்டு வருவதால் நல்ல பலன் அளிக்கிறது.

கிழங்கா மீன் சாப்பிட்டு வருவதால் புற்றுநோயை குணப்படுத்துகிறது. மற்றும் இதில் உள்ள சத்துக்கள் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது. 

கிழங்கா மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?

மேலும், இந்த மீன் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மையை கொண்டுள்ளது. இந்த மீன் சாப்பிடுவதால் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. 

அது மட்டுமில்லாமல் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளான அரிப்பு, தோல் வறட்சி போன்ற உபாதைகள் ஏற்படாமல் தடுக்கிறது. வெயில் காலங்களில் இந்த கிழங்கா மீன் சாப்பிடுவது உடலுக்கு நன்மையை தருகிறது.

மழையாய் கொட்டிய இறைச்சித் துண்டு - விசித்திர சம்பவம் !

இந்த மீன்கள் சாப்பிடுவதால் வாதநோய்கள் வராமல் தடுக்கலாம்.

கிழங்கா மீன் வாரம் ஒருமுறை சாப்பிட்டு வருவதால் மாரடைப்பு, இதயக் கோளாறு போன்ற இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)