அருமையான பெப்பர் இட்லி செய்வது எப்படி?





அருமையான பெப்பர் இட்லி செய்வது எப்படி?

0

மழை காலங்களில் நம்முடைய உணவில் மிளகை அதிகமாக சேர்த்துக் கொண்டால் பல நன்மைகள் அளிக்கும். இந்த சீசனுக்கு ஏற்றார் போல சூடான மிளகு இட்லியை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

அருமையான பெப்பர் இட்லி செய்வது எப்படி?
பொதுவாக நம்முடைய உணவு பட்டியலில் இட்லி மிகவும் அத்தியாவசியமான ஒன்று. அதில் நாம் கூடுதலாக மிளகையும் சேர்த்து சாப்பிட்டால் நன்மைகளும் ஏராளம். மழை காலங்களில் ஏற்படும் தொந்தரவுக்கு நல்ல உணவு இந்த மிளகு இட்லி.

தேவையான பொருட்கள் . :

இட்லி மாவு

மிளகு - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை . :

அருமையான பெப்பர் இட்லி செய்வது எப்படி?

முதலில் மிளகை சூடான எண்ணையில் வறுத்து, அதனை ஆற வைத்து உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். பின்பு, வழக்கம் போல சூடான இட்லியை தயார் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து, கடாயில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்ததும், கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளுங்கள்.

அதன் பின், சுட்டு வைத்த இட்லிகளை சேர்த்து, அதன் மீது பொடித்து வைத்திருந்த மிளகு பொடியை தூவி பிரட்டி விடுங்கள்.

ஆட்டின் கொழுப்பை சாப்பிட்டால்

இதில் உங்களுக்கு தேவைப்பட்டால் குடை மிளகாய் அல்லது வெங்காயம் சேர்த்து வதக்கியும் சாப்பிடலாம். இப்போது, சூடான நெய் மணக்கும் மிளகு இட்லி தயார். 

இதற்கு தேங்காய் சட்னி அல்லது புதினா சட்னி வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.  

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)