தேங்காய் பூரி ரெசிபி செய்வது எப்படி?





தேங்காய் பூரி ரெசிபி செய்வது எப்படி?

0

பல உணவுகளில் தேங்காய் சேர்க்கப் படுகிறது. தேங்காய் உடலுக்கு நல்லதா அல்லது கெட்டதா என பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். தேங்காய் உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். 

தேங்காய் பூரி ரெசிபி செய்வது எப்படி?
எனவே இதய மற்றும் உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது என்று ஒரு சாரரும். நல்ல கொழுப்பைத் தான் அதிகரிக்கச் செய்யும் ஆகவே சாப்பிடலாம் என்று ஒரு சாரரும் குழம்பிக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.

தேங்காய் பாலில் அதிக புரதம் உள்ளது. இது அல்சர் மற்றும் வயிற்றுப் புண்களை ஆற்றும். 

நாம் தேங்காய் பாலை காய்கறிகளுடன் சமைப்பதால் தரமான சத்துக்களும், நார்சத்தும் கிடைக்கப் பெறுவதால் அதிலுள்ள நிறைவுறும் கொழுப்பு சமன் படுத்தப் படுகின்றன. 

நமக்குள் சோம்பேறித்தனம் வளர நாம் அனுமதிக்கலாமா?

இதனால் தேங்காய் பாலில் சமைக்கப்படும் உணவு ஆரோக்கியமானதாக இருக்கும். தேங்காய் வைத்து சுவையான பூரி செய்ய முடியும். இது வித்தியாசமாகவும் அதே நேரத்தில் மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள் . :

தேங்காய் - அரை கப் 

பச்சரிசி மாவு - 2 கப் 

தண்ணீர் - 2 கப் 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - 2 டீஸ்பூன் 

எண்ணெய் - பொறிக்கும் அளவு 

செய்முறை . : 

தேங்காய் பூரி ரெசிபி செய்வது எப்படி?

தேங்காயில் உள்ள கருப்பு பகுதியை நீக்கி விட்டு, அதை அரைத்து கொள்ளவும். தொடர்ந்து பச்சரிசி மாவை வறுத்து கொள்ளவும். அதிகமாக வறுக்க வேண்டாம். தொடர்ந்து பச்சரிசி மாவில், தேங்காய் சேர்த்து கலந்து விடவும். 

2 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். இந்நிலையில் மாவில் இதை சேர்த்து பிசையவும். தொடர்ந்து சிறிய உருண்டைகளாக மாற்றவும். 

குளிர் காலத்தில் வரும் இருமலுக்கு சாப்பிட வேண்டிய உணவுகள் !

தொடர்ந்து வாழை இலையில் உருண்டைகளை வைத்து, அதன் மேலே தட்டு வைத்து வட்டமாக பூரி போல் மாற்றவும். தற்போது இதை சூடான எண்ணெய்யில் சேர்த்து பொறித்து எடுக்கவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)