டேஸ்டியான கோழி மல்லி குருமா செய்வது எப்படி?





டேஸ்டியான கோழி மல்லி குருமா செய்வது எப்படி?

0

தேவையானவை : . 

சிக்கன் லாலிபாப் - 200 கிராம்,

கரம் மசாலாத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்,

தேங்காய் - 1,

கொத்த மல்லித்தழை - 1/2 கட்டு,

சின்ன வெங்காயம் - 100 கிராம்,

பூண்டு - 10 பல்,

இஞ்சி - 1 துண்டு,

பச்சை மிளகாய் - 5,

வெங்காயம் - 100 கிராம்,

தக்காளி - 50 கிராம்.

தனியா தூள் - 1½ டேபிள் ஸ்பூன்,

மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்,

எண்ணெய் - 100 மி.லி.,

உப்பு - தேவைக்கு,

கறிவேப்பிலை - 1 கொத்து,

மாதவிடாய்க்கு முன்பு நடக்கும் மாற்றங்கள் என்ன?

செய்முறை : . 

டேஸ்டியான கோழி மல்லி குருமா செய்வது எப்படி?

கொத்த மல்லியை நறுக்கி தனியாக வைக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து கரம் மசாலாத் தூள், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி விழுதாக அரைத்துக் கொள்ளவும். 

கடாயில் மறுபடியும் எண்ணெய் சேர்த்து அதில் கரம் மசாலாத் தூள், வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். 

ஹைதராபாதி நிஜாமி பிரியாணி செய்முறை !

இத்துடன் தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதில் சிக்கன் லாலிபாப்பை சேர்த்து சில நிமிடம் வேக விட்டு எடுக்கவும். பிறகு கொத்த மல்லித் தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)