ருசியான வெஜ் லாலிபாப் செய்வது எப்படி?





ருசியான வெஜ் லாலிபாப் செய்வது எப்படி?

0

புரட்டாசி மாதம் ஆரம்பிப்பதிலிருந்து அசைவ உணவு சாப்பிட முடியாமல் தவித்த எல்லாரும் இப்போ வெஜிடேரியனில் அசைவ உணவு மாதிரியான உணவுகளை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். 

ருசியான வெஜ் லாலிபாப் செய்வது எப்படி?
சிக்கன் மேல உணவுகளை ஈடுபாடு இருக்கிறவங்களுக்கு சிக்கன் லெக் பீஸ் சாப்பிட முடியல அப்படின்னு வருத்தம் இருக்கா அப்போ இது உங்களுக்கு தான். 

சைவத்தில் சிக்கன் லெக் பீஸ் மாதிரியே வெஜிடபிள் லாலிபாப்பா மாற்றி கொடுத்து அசத்து போறோம். இந்த வெஜிடபிள்ஸ் லாலிபாப் ஆரோக்கியமானதாக  இருக்கும். 

சிக்கன் கால் எப்படி இருக்குமோ அதே போல் இந்த வெஜிடபிள் லாலி பாப்க்கும் சிக்கன் லாலி பப்புக்கு எந்த ஒரு வித்தியாசமும் பாக்க முடியாத அளவுக்கு தத்து ரூபா ரூபமா செஞ்சு நம்ம கொடுக்கப் போறோம். 

சிக்கன் பிரியர்களுக்கு இது என்னடா புரட்டாசி மாதத்தில் நம்ம வீட்ல சிக்கன் செஞ்சு கொடுத்திருக்காங்க குழப்பம் அடைந்து அப்புறம் சாப்பிட்டு  இது சிக்கன் லாலிபாப் விட ரொம்பவே அருமையாக இருக்கிறது. 

அப்படின்னு சொல்லி இன்னும் கேட்ட கேட்டு வாங்கி சாப்பிடுற அளவுக்கு எந்த சிக்கன் லாலிபாப் நம்ம செய்ய போறோம். அது வெஜிடேரியன்ல செய்ய போறோம். 

இப்போ எல்லா அசைவ உணவிற்கும் மாற்று சைவ உணவுகள் வந்திருச்சு. மட்டனுக்கு பதிலா பலாக்காய் யூஸ் பண்றது போல.  எதுவாக இருந்தாலும் சுவை அப்டிகிறது சத்து அப்படிங்கறது வேறுபடும். 

அந்த மாதிரி நாம வெஜிடேரியன்ல நிறைய நான்வெஜ் ஐட்டம்ஸ் பண்றாங்க. வாழைக்காய் மீன் வருவல் மாதிரி பண்றது. 

கண்ணுக்கு முதல்ல நிறைவு கொடுத்து அதுக்கப்புறம் மனதையும் வயிற்றியும் நிறைவு படுத்துவதற்கு தான் இந்த மாதிரி வெஜிடேரியன் ஃபுட் வந்து நான்வெஜ் ஸ்டைல செய்து தராங்க.  வாங்க வெஜ் லாலிபாப் எப்படி பண்ணலாம்னு தெரிஞ்சிக்கலாம்.

தேவையான பொருட்கள் . :

உருளைக்கிழங்கு - 4 

துருவிய கேரட் - 1 

நறுக்கிய குடைமிளகாய் - 1/2

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2 

துருவிய பன்னீர் - 250 கிராம் 

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 

மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்  

பிரட் - 2 

உப்பு - தேவையான அளவு 

லாலிபாப் மேல் பூசுவதற்கு . :

சோள மாவு - 1 டீஸ்பூன்  

மைதா மாவு - 1 டீஸ்பூன் 

உப்பு - 1 சிட்டிகை

மிளகு தூள் -  1 சிட்டிகை 

தண்ணீர் - தேவையான அளவு 

பிரட் தூள் - 2 கப்  

குச்சிகள் - 6 

எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை . :

ருசியான வெஜ் லாலிபாப் செய்வது எப்படி?

முதலில் உருளைகிழங்கை வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் முதலில் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக மசித்து கொள்ளவும்.  

மசித்து உருளைகிழங்கில் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய  குடை மிளகாய், பொடியாக  நறுக்கிய  வெங்காயம் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

பிறகு துருவிய பன்னீர், மிளகாய்தூள், மிளகுதூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.  பின் கொத்தமல்லி, பிரட் தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பிசைந்து வைத்துள்ள லாலிபாப் கலவையை குச்சிகளில் சிக்கன் கால் போன்ற வடிவில் செட் செய்து கொள்ள வேண்டும்.  ஒரு சிறிய பாத்திரத்தில் சோளமாவு, மைதா மாவு, மிளகுதூள், உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு  பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். 

பின் செய்து வைத்துள்ள வெஜ் லாலிபாப் மேல் ஸ்பூனால் எடுத்து அனைத்து பக்கமும் படும் படி ஊற்ற வேண்டும்.    ஒரு ப்ளேட்டில் பிரட் தூளை கொட்டி அதில்  வெஜ் லாலி பாப்களை மெதுவாக எல்லா பக்கங்களிலும் படுமாறு பிரட்டி எடுத்து வைக்கவும்.  

ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் தயார் செய்து வைத்துள்ள லாலி பாப்களை பொரித்து. எடுக்கவும்.  ஒரு பிளேட்டில் வெஜ் லாலி பாப்களை  சூடாக எடுத்து வைத்து தக்காளி சாஸ் உடன் பரிமாறவும். இதோ சூடான சுவையான சத்து மிக்கவெஜ் லாலிபாப் தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)