ப்ரைட் ரைஸ், சைனீஸ் ப்ரைட் ரைஸ் இரண்டுக்கும் வித்தியாசம் என்ன?





ப்ரைட் ரைஸ், சைனீஸ் ப்ரைட் ரைஸ் இரண்டுக்கும் வித்தியாசம் என்ன?

0

பொடியாக நறுக்கிய கேரட், குடமிளகாய், ஸ்பிரிங் ஆனியன் சோள மணிகளுடன் நெய்யில் வதக்கி பெரிய தீயில் (2/3 நிமிடம்) வைத்துக் கொள்ள வேண்டும்.

ப்ரைட் ரைஸ், சைனீஸ் ப்ரைட் ரைஸ் இரண்டுக்கும் வித்தியாசம் என்ன?
Ghee rice தயாரித்துக் கொள்ள வேண்டும். குக்கரில் வைக்காமல் பாஸ்மதி அரிசியை சிறிது நெய்யுடன் அடி கனமுள்ள வாணலியில் 2 நிமிடம் வதக்கி, தண்ணீரில் ஒன்றுக்கொன்று ஒட்டாமல், வேக வைத்துக் கொள்ளவும். 

நெய்யுடன் ஏலம், கிராம்பு சிறிது சேர்க்கலாம். இது வெண்மையாக இருக்கும். பரிமாறும் முன்னர் ghee rice ஐ போட்டு, மேலக, நெய்யில் வதக்கிய காய்கறிகளைத் தூவி விடவும். 

1 கப் சமைத்த ghee rice க்கு ஒரு மேஜைக்கரண்டி காய்கறிகள் தூவலாம். பிரியாணி, புலாவ் போலில்லாமல் இதற்கு உப்பு சிறிது கம்மியாகவே, சாதத்திலும் காய்கறியிலும் சேர்க்க வேண்டும். 

காய்கறி வதக்கும் போது மஞ்சள் பொடி வேண்டாம். ஃப்ரைட் ரைஸுக்குக் காரமே கிடையாது. பச்சை மிளகாய் / காரப் பொடி சேர்க்கக் கூடாது. இதற்கு ஏற்ற சைட் டிஷ் காலிஃப்ளவர் (அ) பனீர் (அ) விஜிடபிள் மஞ்சூரியன்.

பரிமாறும் போது, டேபிளின் நடுவில் தனி கிண்ணங்களில் ஸ்பூனுடன் தக்காளி சாஸ், பச்சை மிளகாய் சாஸ் / சட்னி மற்றும் வினிகர் வைக்க வேண்டும். சாப்பிடும் போது அவரவர் சுவைக்குத் தகுந்தாற் போல் போட்டுக் கொள்ளலாம்.

ஃப்ரைட் ரைஸுக்கு வறுத்த முந்திரி கட்டாயமில்லை. ஆசையாய் இருந்தால் மேலே தூவிக் கொள்ளலாம். ஃப்ரைப் ரைஸுக்குக் கரம் சமாலா பொடி, காரப் பொடி எதுவும் கூடாது. பூண்டும் கிடையாது. சைட் டிஷ்ஷில் உள்ள காரம் போதும்.

சைனீஸ் ஃப்ரைட் ரைஸ்

ப்ரைட் ரைஸ், சைனீஸ் ப்ரைட் ரைஸ் இரண்டுக்கும் வித்தியாசம் என்ன?

சைனீஸ் ஃப்ரைட்  ரைஸ் என்றால் பொடியாக அரிந்த முட்டைக் கோஸையும் இளம் மூங்கில் குருத்தையும் மேற்குறிப்பிட்ட காய்களுடன் சேர்க்கலாம். கூடுதலாக ஓர் கிண்ணத்தி்ல சோயா சாஸ் வைத்து விடவும்.

இதே காஷ்மீரிப் புலாவ் என்றால் நறுக்கிய உலர்ந்த பழங்கள், டூட்டி ப்ரூட்டி (பச்சை, சிவப்பு, மஞ்சள்), உலர்ந்த திராட்சை, பேரிச்சை, ஆப்பிரிகாட் முதலியவற்றை நெய்யில் ஒரு நிமிடம் வதக்கி, உப்பு சிட்டிகை மட்டுமே போட்டு, 

சிறிது சர்க்கரை சேர்த்த நீரில் (பாஸ்மதி அரிசியை நெய்யில் வதக்கி விட்டு) சேர்த்து வேக வைத்து பின் பழங்களை சேர்த்துக் கலந்து, புதிய திராட்சை, நறுக்கிய பைன் ஆப்பிள், மாதுளை முத்துக்களால் அலங்கரிக்கவும்.

சில ஹோட்டல்களில் அரிசிக்குக் கேசரி கலர் சேர்ப்பதால் இளம் ஆரஞ்சு வர்ணத்துடன் இருக்கும். பொதுவாக இதற்கு குங்குமப் பூவை சிறிது பாலில் கரைத்து அரிசி வேகும் போதே சேர்த்து விட வேண்டும். 

ஒரு கப் அரிசிக்கு கால் கப் நறுக்கிய உலர் பழங்கள், ஒரு தேக்கரண்டி சர்க்கரை தேவை. காஷ்மீரி புலாவ்விற்குத் தொட்டுக் கொள்ள ஏதும் கிடையாது. ஏதாவது பழ மில்க் ஷேக்கைப் பின்னர் குடிக்கலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)