வெஜிடேஸ் என்ற வார்த்தையில் இருந்து தான் காய்கறிகளை வெஜிடேபிள் என்று அழைக்கிறோம். நற்பதமான காய்கறிகளை சமைப்பதற்கு முன்னாள் பச்சையாக உண்ணலாம்.
ஒவ்வொரு காய்கறியிலும் பல விதமான பயன்கள் குவிந்து கிடக்கிறது. காரட், தக்காளி போன்ற காய்கறிகளை நற்பதத்துடன் பச்சையாக உட்கொண்டால், உடலுக்கு பல நன்மைகள் கிட்டும்.
காய்கறிகளில் தான் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாஷியம் வளமையாக அடங்கியுள்ளது.
ஆரோக்கியமான உணவிற்கு காய்கறிகள் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணுங்கள். அப்படி செய்வதால் இதய நோய்கள், சர்க்கரை நோய் மற்றும் புற்று நோய்கள் வராமல் தடுக்கும்.
காய்கறிகளில் பல வகைகள் உண்டு. அவைகள் விதை சம்பந்தப்பட்ட காய்கறிகள், வேர் சம்பந்தப்பட்ட காய்கறிகள், இலை வகை காய்கறிகள் மற்றும் பூக்கள் வகை காய்கறிகள்.
ஒவ்வொன்றிலும் பல பயன்களும் அடங்கியுள்ளது. மாலை வேளையில் பெரும்பாலும் நாம் டீ, காபி உடன் ஸ்நாக்ஸ் வைத்து சாப்பிடுவோம். குழந்தைகள் பள்ளி முடித்து வந்தவுடன் ஸ்நாக்ஸ் சாப்பிடுவார்கள்.
எப்போதும் ஒரே மாதிரியாக ஸ்நாக்ஸ் சாப்பிடுவதுடன் சற்று வித்தியாசமாக சாப்பிட்டு பாருங்கள். வேறு சுவையாக இருக்கும்.
முட்டைகோஸ், கேரட், பட்டணி சேர்த்து கலவையான ஒரு வடை செய்யலாம். இந்த வடை வீட்டிலேயே செய்வதால் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
ஊறுகாய்யை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் !
தேவையான பொருட்கள் : .
உளுத்தம் பருப்பு - 200 கிராம்
கடலைப் பருப்பு - 100 கிராம்
கேரட் துருவல் - 1 கப்
கோஸ் பொடியாக நறுக்கியது - 1 கப்
பொடியாக நறுக்கிய குடமிளகாய் - 1 கப்
பச்சைப் பட்டாணி - 1 கப்
புதினா - சிறிதளவு
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 250 மில்லி
உப்பு - தேவையான அளவு
செய்முறை : .
உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் 1 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீர் வடித்து, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
இப்போது மாவுடன் கேரட் துருவல், கோஸ் பொடியாக நறுக்கியது, குடமிளகாய், சோம்பு, புதினா, பட்டாணி சேர்த்து கலக்கவும்.
சுவையான சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி?
அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவை சிறுசிறு உருண்டைகளாக செய்து பின்னர் தட்டையாக வடை போல் தட்டி எண்ணெய்யில் போட்டு எடுக்கவும். அவ்வளவு தான் சூடான காய்கறி வடை ரெடி.