கம கம பலாப்பழ பணியாரம் செய்வது எப்படி?





கம கம பலாப்பழ பணியாரம் செய்வது எப்படி?

0

நம் மூதாதையர்கள் முக்கனிகளை  மா பலா வாழை என்று பட்டியலிட்டு நமது ஆரோக்கியத்துக்கு வழி சொன்னார்கள். அந்த முக்கனிகளில் பலா பழத்தில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் நிறைய  தாதுக்கள் உள்ளன. 

கம கம பலாப்பழ பணியாரம் செய்வது எப்படி?
அத்துடன் அதற்குள் நிறைய நார்ச்சத்து உள்ளது. தற்போது பலருக்கு அதிக மன அழுத்தம் மற்றும் வேலை சுமையால் விரைவிலேயே முதுமைத் தோற்றம் ஏற்படுகிறது. 

அப்படிப் பட்டவர்கள் இந்த பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரிக்க செய்கிறது. 

மேலும், விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படுவதைத் தடுத்து ஸ்கின்னை ஷைனிங் ஆக வைத்து கொண்டு இளமையோடு எப்போதும் இருக்கலாம்.

பலருக்கு சீக்கிரமே கண் பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்ற பார்வை கோளாறுகள் ஏற்பட்டு விடுகிறது.

அந்த மாதிரி நபர்கள் அப்படி ஏற்படுவதைத் தடுக்க பலாப்பழங்களை சாப்பிட்டு வருவது நல்லது. இதில் உள்ள வைட்டமின் ஏ கண்ணுக்கு நன்மை செய்கிறது.

மீன் எண்ணெய் சாப்பிடமாட்டீங்களா? உடனே சாப்பிட ஆரம்பிங்கப்பா !

தேவையானவை : .

பலாச்சுளை - 15 

தேங்காய் துருவல் - 1 கப்

முந்திரி, ஏலக்காய் - தேவையான அளவு 

வெல்லம் - தேவையான அளவு  

பச்சரிசி மாவு - 2 கப்

நெய் - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை : .

கம கம பலாப்பழ பணியாரம் செய்வது எப்படி?

முதலில் பலாச் சுளைகளை கொட்டை நீக்கிப் பொடியாக நறுக்கி எடுத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அடுத்து தேங்காய் துருவல், முந்திரியை அரைக்கவும். ஏலக்காயையும் அரைக்கவும். 

அடுப்பில் கடாய் வைத்து மூன்று கப் தண்ணீர் சேர்த்து வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சவும். இப்போது அதில் பச்சரிசி மாவு, பலாப்பழ கூழ், தேங்காய், முந்திரி விழுது, ஏலக்காய் தூள் நெய் கலந்து நன்கு கெட்டியாக கிளறவும். 

சுவையான பனீர் தோசை செய்வது எப்படி?

அடுத்ததாக அடுப்பில் பணியார கல் வைத்து இந்த மாவு கலவையை ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி  இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும். சூடாக பரிமாறவும். அவ்வளவு தான் பலாப்பழ பணியாரம் ரெடி. 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)