ஜப்பானில் தயாரிக்கப்படும் சுஷி உணவு... சுவாரசிய தகவல்கள் !





ஜப்பானில் தயாரிக்கப்படும் சுஷி உணவு... சுவாரசிய தகவல்கள் !

0

உலகில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் கார்கள், ஆபரணங்கள், ஆடைகள் போன்றவற்றைத் தான் வித்தியாசமாக தயாரித்து போட்டி போட்டுக் கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்வதைப் பார்த்திருப்போம். 

ஜப்பானில் தயாரிக்கப்படும் சுஷி உணவு... சுவாரசிய தகவல்கள் !
ஆனால் மிக அதிக விலையில் உணவுப் பொருள்களை விற்பனை செய்வது பற்றி உங்களுக்குத் தெரியுமா? ஆம் உண்மை தான். 

ஜப்பானில் தயாரிக்கப்படும் சுஷி என்ற உணவு உலகின் மிக காஸ்டிலியான உணவு என்ற சாதனையை படைத்துள்ளது. எப்படி? ஏன்? என்பது குறித்த சுவாரஸ்சிய தகவல்கள் இங்கே..

முகப்பொலிவு பெற, வைட்டமின் E கேப்சூலை இப்படி பயன்படுத்துங்கள் !

ஜப்பானில் ஓசாகாவில் உள்ள ஒரு உணவகம் ஒன்று சுஷி என்ற உணவை தனித்துவமாக தயார் செய்துள்ளது. என்ன தனித்துவம் இதில் உள்ளது தெரியுமா? 

இந்த உணவு செய்வதற்குப் பயன்படுத்தும் சுஷி வினிகர், டோக்கியோ மற்றும் சிபாவில் இருந்து பெறப்படுகிறது. 

இதே போன்று சீனாவிலிருந்து வரும் மாட்சுடேக் காளான்கள், இத்தாலியில் இருந்து கருப்பு உணவு பண்டங்கள் மற்றும் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து இறைச்சி போன்ற பொருள்கள் வாங்கப்படுகிறது. 

இவ்வாறு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெறப்படும் பொருள்களை யெல்லாம் ஒன்றிணைத்து பராம்பரிய ஜப்பானிய முறைப்படி இந்த உணவுப் பொருளை தயாரித்துள்ளனர்.

குறிப்பாக இதற்காகப் பயன்படுத்தப்படும் டைல்ஃபிஷ் ஜப்பானின் தெற்கே உள்ள கியூஷு தீவில் அமைந்துள்ள ஓய்டாவைச் சேர்ந்தது,பொத்தான் இறால் ஹொக்கைடோவின் வடக்கே உள்ள தீவில் இருந்து வருகிறது. 

மேலும் ஷின்கோ மீன்கள் ஜப்பானின் பிரதான தீவான ஹொன்ஷூவின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஷிசுவோகாவைச் சேர்ந்தது மற்றும் புலி இறால்கள் ஹொன்சு மற்றும் ஷிகோகு தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவான அவாஜியில் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுஷியின் 20 பொருள்களை உள்ளடக்கிய கிவாமி ஓமகேஸ் என்ற உணவை ஜப்பானின் பாராம்பரிய முறைப்படி அந்த உணவகம் தயாரிக்கிறது. 

இதனால் தான் இதன் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 2 லட்சம் வரை விற்பனை செய்யப் படுவதாகவும் உணவக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். 

எந்த உணவுக்கு எந்த சைட் டிஷ் சாப்பிடலாம்?

இதில் பாரம்பரிய நுட்பங்கள் மற்றும் முறைகளைப் பயன்படுத்தியதன் விளைவு தான் சுஷி கிரிமோனின் தற்போது சாதனைப் படைத்துள்ளது. 

ஜப்பானில் தயாரிக்கப்படும் சுஷி உணவு... சுவாரசிய தகவல்கள் !

ஜப்பான் முழுவதிலும் இருந்து கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதோடு மட்டுமின்றி இந்த உணவகம் பாரம்பரிய ஜப்பானிய உணவு வகைகளை மேம்படுத்து வதற்காக இந்த உணவை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு தனித்துவமாக உருவாக்கப்பட்ட இந்த ஜப்பானின் விருப்பமான சுஷிக்கு உலகம் முழுவதும் பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இஞ்சியை தினமும் உணவில் சேர்க்க இதுதான் காரணம்... தெரியுமா?

இவ்வாறு உலகின் மிக விலையுயர்ந்த சுஷிக்கான சாதனையை இதற்கு முன்பு செஃப் ஏஞ்சலிட்டோ அரனேட்டா மேற்கொண்டார். 

முன்னதாக அவர் உணவருந்தி யர்களிடம் 91 ஆயிரத்து 800 பிலிப்பைன் பெசோக்கள் சுமார் ரூ. 1 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளார். இந்த சாதனையைத் தான் தற்போது ஜப்பானிய உணவகம் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)