முகப்பொலிவு பெற, வைட்டமின் E கேப்சூலை இப்படி பயன்படுத்துங்கள் !





முகப்பொலிவு பெற, வைட்டமின் E கேப்சூலை இப்படி பயன்படுத்துங்கள் !

0

வைட்டமின்  E கேப்சூல் ஆனது முகம் மற்றும் தலைமுடி பராமரிப்பில் முக்கிய பொருளாக உள்ளதை கேள்விப் படுகிறோம். காஸ்மெட்டிக் பொருட்களை வாங்கும் போது அதில் முக்கிய அங்கமாகவும்  உள்ளது. 

முகப்பொலிவு பெற, வைட்டமின் E கேப்சூலை இப்படி பயன்படுத்துங்கள் !
குறைவான விலையில் கிடைக்கும் ஆரோக்கியம் நிறைந்த பொருட்களில் இதுவும் ஒன்று. ஆனால் இதனை எப்படி பயன்படுத்துவது என்பதில் பலருக்கு சந்தேகம் இருக்கும்.  

எந்த வகையில் பயன்படுத்தினால் விரைவாக அதன் பலன்களை அடையலாம் என்பதை பார்ப்போம். சிலருக்கு சருமம் என்றும் சொரசொரப்பாக இருக்கும் அவர்களுக்கான அழகு குறிப்பு டிப்ஸ் இதோ.

அவசர காலத்தில் நம் உயிரைக் காப்பாற்றும் ஸ்மார்ட்போன்... எப்படி தெரியுமா?

ஒரு பௌளை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் டீத்தூள் அல்லது காபி தூள், ஒரு விட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 

நன்கு கலந்த பின்பு முகத்தை அப்ளை செய்து நன்கு ஸ்க்ரப் செய்ய வேண்டும். பின்பு 10 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வர சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் பளபளப்பாக மற்றும் மென்மையாக காணப்படும்.

வைட்டமின் E கேப்ஸ்யூலை அதன் முனையில் ஊசிகொண்டு துளையிட்டு, முகத்தில் நேரடியாக தடவலாம். அல்லது ஒரு  மில்லி வைட்டமின் E உடன்  இரண்டு மில்லி ஆலிவ் ஆயில் சேர்த்தும் சருமத்தில் மசாஜ் செய்யலாம். 

இரண்டு  வைட்டமின் E கேப்ஸ்யூலை துளையிட்டு அதனுடன்  நாம் அன்றாடம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய்க்குள் போட்டு பயன்படுத்தலாம். 

இதனால் கூந்தலின் அடர்த்தி அதிகமாவதாக பலனடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர். உங்களது பேஸ் வாஸ் டோனர், மாய்சரைஸர், ஆலோ வேரா ஜெல், ஷாம்பு அல்லது சீயக்காய்  இவற்றுடன் இந்த  கேப்சூலை சேர்த்து பயன்படுத்தலாம்.

உங்களுக்கு எண்ணெய் சருமம் என்றால் கேப்சூலை போட்ட 15 நிமிடத்தில் முகத்தை கழுவி விடவும்.  வறண்ட சருமம் எனில் இரவு முழுக்க கூட அப்ளை  செய்யலாம்.

கண்டிப்பாக ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இந்த  கேப்சூலை தொடர்ந்து சருமத்திற்கு பயன்படுத்த கூடாது. வாரத்திற்கு இரு முறை போதுமானது.  

(getCard) #type=(post) #title=(You might Like)

இத்துடன் வைட்டமின் E சத்துக்கள் உள்ள பாதாம், வேர்க்கடலை, வெண்ணெய், கீரை, சூரிய காந்தி விதைகள் போன்ற சத்தான ஆகாரங்களை எடுத்துக் கொள்ளும் போது, எந்த ஒரு எக்ஸ்டெர்னல் ஒயிட்னிங் க்ரீம் பயன்படுத்தாமலே சருமம் ஆரோக்கியமாக இருப்பதை உணரலாம். 

நாம் எடுத்துக் கொள்ளும் உணவில்  வைட்டமின் E இருக்கும் பட்சத்தில், சருமம், கூந்தல் பராமரிப்பு மட்டுமின்றி பாதவெடிப்பு, நகங்களின்  ஆரோக்கியம் என உடல் சார்ந்த பிரச்சனைகள் மேம்படுவதனை காணலாம். 


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)