இஞ்சியை தினமும் உணவில் சேர்க்க இதுதான் காரணம்... தெரியுமா?





இஞ்சியை தினமும் உணவில் சேர்க்க இதுதான் காரணம்... தெரியுமா?

0

இந்தச் சிறிய வேர் தான் பல இந்திய உணவுகளுக்கும் அச்சாரமாக இருக்கிறது. நறுமணமும் சுவையும் மிகுந்த இஞ்சி டீ-யை சொல்லவா அல்லது 

இஞ்சியை தினமும் உணவில் சேர்க்க இதுதான் காரணம்... தெரியுமா?
நமது குழம்புகளுக்கும், கெபாப் மற்றும் தந்தூரி போன்ற இறைச்சி உணவுகளுக்கும் சுவையை அதிகரிக்கக் கூடிய இஞ்சி-பூண்டு பேஸ்டை சொல்வதா? 

நிலத்திற்கு அடியில் வளரும் இந்த மூலிகை தான், நம் எல்லாருடைய சமையலறையிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. இஞ்சிக்கும் மஞ்சள், கலங்கல், ஏலக்காய் ஆகியவற்றுக்கும் இடையே நெருங்கிய தொடர்புள்ளது. 

இஞ்சியின் சுவை ஒருவகையான காரமாக இருந்தாலும், இதில் ஊட்டச்சத்து அதிகளவு நிறம்பியுள்ளது. இஞ்சியினால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

(getCard) #type=(post) #title=(You might Like)

குமட்டல் வருவதை தடுக்கும் : 

காலையில் எழுந்ததும் நோய்வாய்ப் பட்டவர் போல் பலவீனமாக உணர்கிறீர்களா? அல்லது, அஜீரணக் கோளாறு காரணமாகவோ, குளிர்ச்சி காரணமாகவோ உங்களுக்கு அடிக்கடி குமட்டல் வருவது போல் இருக்கிறதா? கவலையை விடுங்கள். 

இதற்கான மருந்து உங்கள் வீட்டின் சமையலறையில் உள்ளது. இஞ்சியில் இருக்கும் ஜிஞ்சரால் என்ற கலவை, அதிகளவு ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. 

ஆகையால் உங்களுக்கு வரக்கூடிய குமட்டலை இது தடுக்கும். மேலும், ஆக்ஸிடேடிவ் அழுத்தத்தையும் இவை குறைக்கிறது. 

எடை குறைப்பிற்கு உதவுகிறது : 

இஞ்சி நம் உடலுக்கு பல வழிகளில் நன்மைகளை தருகிறது. இதில் அதிகளவு அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், உடல் எடை அதிகமுள்ளவர்கள் தங்கள் டயட்டில் இஞ்சியை சேர்க்கும் போது, உங்கள் எடை குறையத் தொடங்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் : 

இஞ்சியை தினமும் உணவில் சேர்க்க இதுதான் காரணம்... தெரியுமா?

இஞ்சியில் அதிகளவு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளது. தினமும் இஞ்சியை சாப்பிடுவதால், இ-கோலி மற்றும் ஷிகெலா போன்ற பாக்டீரியாக்கள் உங்கள் உடலில் வளர விடாமல் தடுக்கலாம். 

மேலும் இதிலுள்ள ஜிஞ்சரால், நமது வாய்களில் பாக்டீரியா உற்பத்தி ஆவதை தடுத்து, நமது ஆரோக்கியத்திற்கு உதவி செய்கிறது.

மூல நோயால் நம்முடைய உடலில் மாற்றம் ஏற்படுமா?

சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது : 

தினசரி உங்கள் டயட்டில் இஞ்சியை சேர்த்துக் கொண்டால், உங்கள் சர்கரை அளவை கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்கலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு இஞ்சி அருமருந்து போன்றது. 

இஞ்சியை தொடர்ந்து 12 வாரங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால், சர்க்கரை அளவு வெகுவாக குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மாதவிடாய் வலியை குறைக்கிறது : 

இஞ்சியை தினமும் உணவில் சேர்க்க இதுதான் காரணம்... தெரியுமா?

அசிடாமினோபின், கஃபைன், நோவாஃபின் போலவே இஞ்சியும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலியை வெகுவாக குறைக்கிறது என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வேலையில் சேரும் போதே இதை எல்லாம் நிறுவனத்திடம் கேட்டுப் பெறுங்கள் !

அல்சைமர் தாக்கும் அபாயத்தை குறைக்கிறது : 

நாள்பட்ட வீக்கத்திற்கும் அல்சைமர் போன்ற மூளை கோளாறுகளுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? 

இஞ்சியில் அதிகளவு அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், இதை நீங்கள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், அறிவாற்றலில் எந்த சரிவும் ஏறபடாமல் தற்காத்து கொள்ளலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)