நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்ன பயன்கள் !





நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்ன பயன்கள் !

0

தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும், ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக் கொண்டது நெல்லிக்காய். ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிளுக்குச் சமம்.

நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்ன பயன்கள் !
நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுர்வேதம் போன்ற  இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்து கிறார்கள்.  

வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் திரிபலா சூரணத் தயாரிப்பில் நெல்லிக் காய்க்கு முக்கியப் பங்கு உண்டு. 

அவல் பிரியாணி செய்முறை ! 

உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கி விடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும்.  

நெல்லிக்காய் வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும். திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. 

ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக  அதிகம். ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. 

பச்சைக் காயாகச் சாப்பிடும் போது தான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக் காயாவது  சாப்பிடலாம்.  

நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோ குளோபின் அளவை  அதிகரிக்க வைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. 

நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளர வைக்கும் என்பதால் தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும்  பயன்படுத்தப் படுகிறது. 

தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டு வந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். 

அதிக  உடல் பருமனால் கஷ்டப் படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்தி வந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம். 

இதயத்துக்கும் நல்லது. நோய்த் தொற்றுகள் வராமல் காக்கும். நம் உடம்பில் வளர்சிதை மாற்றம் நிகழும் போது ஒவ்வொரு செல்லில் இருந்தும் கழிவுகள் வெளியேறும். 

பேலியோ டயட் உணவு முறை பலன் தரக்கூடியது?

இந்தக் கழிவுகள் வெளியேற வில்லை என்றால், உடலில் வீக்கம் ஏற்படுவதில் ஆரம்பித்து புற்றுநோய் வரை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. 

பெரிய நெல்லிக்காயில் உள்ள பாலிபினால், டேனின், ஃப்ளேவினாய்ட்ஸ் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து மேலே சொன்ன பிரச்னைகள் வராமல் தடுப்பவை.

நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்குமா?

நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்ன பயன்கள் !

நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று பெரும் பாலோனோர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். 

உண்மையில் இதில் இருக்கிற நோய் எதிர்ப்பு சக்தி நம் உடம்பில் இருக்கிற கபத்தை வெளியேற்றும், அதைத் தான் நாம் சளி பிடித்துக் கொண்டதாக நினைக்கிறோம். 

ஆனால், இரவு நேரத்தில் நெல்லிக்காய் சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு ஏற்படும். குழந்தைகளுடைய வாட்டர் பாட்டிலில் ஒரு நெல்லிக்காயை கட் பண்ணிப் போட்டு, அதில் தண்ணீரை ஊற்றி விடலாம். 

நெல்லிக்காய் ஊறிய இந்தத் தண்ணீரைக் குடித்தாலே குழந்தைகளுக்குப் போதுமான வைட்டமின் சி கிடைத்து விடும். ஆனால், குழந்தைகளுக்கு மாலை 5 மணிக்கு மேல் நெல்லிக்காய் சாப்பிடக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

காஷ்மீர் புலாவ் செய்வது எப்படி?

இதில் கவனமாக இருங்கள்!

நெல்லிக்காய் சாறு ரத்தத்தில் சர்க்கரை அளவையும் உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கும் என்பதால், இந்தப் பிரச்னைகளுக்கு மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள், 

ஓர் இயற்கை மருத்துவரிடம் தினசரி எத்தனை நெல்லிக்காய் சாப்பிட வேண்டும் என்பதைக் கேட்டு தெரிந்து கொண்டு அதன் பிறகு சாப்பிடலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)