சுவையான பாதாம் பூண்டு சூப் செய்வது எப்படி?





சுவையான பாதாம் பூண்டு சூப் செய்வது எப்படி?

0

நம் உடல் ஆரோக்கியத்திற்கு நாம் எதிர்பாராத நன்மைகளை தரக்கூடியது இந்த பாதாம் (Almonds). இந்த பாதம் பருப்பை நீங்கள் அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊற வைத்தும் சாப்பிடலாம். 

சுவையான பாதாம் பூண்டு சூப் செய்வது எப்படி?
ஆனால் பாதம் பருப்பை அப்படியே சாப்பிடுவதை விட ஊற வைத்து சாப்பிடுவது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என்ற கருத்து உண்மை தான். ஊற வைத்த பாதாம் எளிதில் செரிமானம் ஆகும். 

மேலும், ஊற வைத்த பாதாம், ஆன்டி ஆக்ஸிடண்ட் நிறைந்தள்ளது. பாதாம் பருப்பின் வெளிப்புற தோலை நீக்கி சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார். 

ஏனெனில், சருமத்தில் ஒரு என்சைம் தடுப்பான் இருப்பதால், அது உறிஞ்சுதல் மற்றும் செரிமான செயல்முறையை பாதிக்கும். 

இந்த ஊற வைத்த பாதாமில் உள்ள வைட்டமின் பி மற்றும் ஃபோலிக் அமிலம் புற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுகிறது.

பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. 

மேலும், இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருவதாக ஆய்வுகளில் கண்டறியப் பட்டுள்ளது. குறிப்பாக பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடை குறையும்.

தேவையான பொருட்கள் : .

பாதாம்கள் ஊற வைத்து, தோல் உரித்தது - 250 கிராம் அளவு 

ஐஸ் தண்ணீர் - 500 மிலி 

வெள்ளை பிரட், ஓரங்கள் நீக்கி துண்டுகளாக நறுக்கியது - 80 கி 

பூண்டு பற்கள் - நறுக்கியது 2 

ஆலிவ் ஆயில் - 50 மிலி 

ஒயிட் ஒயின் வினிகர் - 50 மிலி 

உப்பு - தேவைக்கேற்ப 

பொடித்த கரு மிளகு - தேவைக்கேற்ப

உலர் திராட்சைகள் - 150 கிராம் 

செய்முறை : . 

சுவையான பாதாம் பூண்டு சூப் செய்வது எப்படி?

மிக்ஸியில் பாதாம்களைக் கொட்டி, முடிந்த வரை மிருதுவாக அரைத்துக் கொள்ளவும். 50 மிலி தண்ணீர் சேர்த்து, பேஸ்ட்டாக அரைக்கவும். பிரட் மற்றும் பூண்டு சேர்த்து மீண்டும் அரைக்கவும்.

மிக்ஸி ஓடிக் கொண்டிருக்கும் போதே, மீதமுள்ள தண்ணீரைச் சேர்க்கவும். பிறகு அதனுடன் ஆலிவ் எண்ணெயைச் சேர்க்கவும்.

வினிகரைச் சேர்த்து, உப்பினால் சுவையூட்டி, பிறகு புதிதாக அரைத்த மிளகுத் தூளைக் கலக்கவும். பரிமாறுவதற்கு, நான்கு ஷாட் கிளாஸ்களில் சூப்பை ஊற்றவும். சில உலர் திராட்சைகளைச் சேர்த்து அலங்கரிக்கவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)