நெல்லிக்காய் யார்? எத்தனை சாப்பிடலாம்?

நெல்லிக்காய் யார்? எத்தனை சாப்பிடலாம்?

0

நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுர்வேதம் போன்ற  இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்து கிறார்கள்.  

நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்ன பயன்கள் !

வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் திரிபலா சூரணத் தயாரிப்பில் நெல்லிக் காய்க்கு முக்கியப் பங்கு உண்டு. 

பச்சைக் காயாகச் சாப்பிடும் போது தான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக் காயாவது  சாப்பிடலாம்.  

நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோ குளோபின் அளவை  அதிகரிக்க வைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. 
நெல்லிக்காய்... யாருக்கு, எத்தனை?

வைட்டமின் `சி' நாளொன்றுக்கு,

ஒன்று முதல் 3 வயதுக் குழந்தைகளுக்கு 15 மில்லி கிராமும்,

4 - 13 குழந்தைகளுக்கு 25 - 45 மில்லிகிராம் வரையிலும்,

வளர்ந்தவர்களுக்கு 90 மில்லி கிராம் வரையிலும் போதுமானது.

ஆனால், 100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் வைட்டமின் `சி' இருக்கிறது. பெரிய நெல்லிக்காயை அழுத்தினால் ஆறு கீற்றுகளாக வரும். 

பெரியவர்கள் அதில் இரண்டு கீற்றுகளை மட்டும் தினசரி சாப்பிட்டால் போதும். சாறாகக் குடிக்கிறீர்கள் என்றால், அரை நெல்லிக்காய் போதும். குழந்தைகளுக்குத் தினமும் ஒரு கீற்று போதும்.

இப்படியும் சாப்பிடலாம்?

பெரிய நெல்லிக்காயையோ, அதன் சாற்றையோ நேரடியாக எடுத்துக்கொள்ள முடியாதவர்கள், நெல்லிக்காயுடன் வறுத்த உளுந்து, காய்ந்த மிளகாய், தேங்காய் சேர்த்து அரைத்துத் துவையலாகச் சாப்பிடலாம்.
அதிகமாகச் சாப்பிட்டால் பக்க விளைவுகள் வருமா?

வைட்டமின் `சி' நீரில் கரையும் தன்மை கொண்டது என்பதால், அதிகப் படியானதை உடம்பால் சேமித்து வைத்துக் கொள்ள முடியாது. தேவையானதை எடுத்துக் கொண்டு மீதத்தை உடல் வெளியேற்றி விடும். 

நெல்லிக்காய் அதிகமாகச் சாப்பிட்டால், ஒரு சிலருக்கு வாந்தி உணர்வு, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்னைகள் வரலாம். மற்றபடி பெரிதாக வேறு எந்தப் பிரச்னையும் வராது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)