ரமலான் ஸ்பெஷல் கிரிஸ்பி மிளகாய் சிக்கன் செய்வது எப்படி?

ரமலான் ஸ்பெஷல் கிரிஸ்பி மிளகாய் சிக்கன் செய்வது எப்படி?

0
பச்சை மிளகாய் என்றவுடன்  பலருக்கு காரம் தான் நினைவுக்கு வரும். பச்சை மிளகாயில் இருக்க கூடிய சத்துக்கள், நன்மைகள் என்ன என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. 
ரமலான் ஸ்பெஷல் கிரிஸ்பி மிளகாய் சிக்கன் செய்வது எப்படி?
காரம் அதிகமாக இருக்கிறது என்பதற்காக சிலர் இதனை ஒதுக்குவதும் உண்டு. பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க பச்சை மிளகாய் உதவிடும்.  எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

ஆண்கள் பச்சை மிளகாய் உண்ணுவதால் புரோஸ்டேட் புற்றுநோய் பிரச்சனைகள் வராமல் இருக்கும் என அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகிறது. 

இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு  மிளகாய் ஆரோக்கிய மானதாகும். பச்சை மிளகாயில் ஆன்டி பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளது. இந்த குணத்தினால் சரும தொற்றுக்கள் ஏற்படாமல் காக்கிறது.  
பச்சை மிளகாயில் இயற்கையாகவே இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பச்சை மிளகாயை சாப்பிடுவதால் தீவிர எரிச்சல் உணர்வு உண்டாகும். அது வலியையும் வீக்கத்தையும் ஏற்படுத்தும். 

சிலருக்கு வயிற்று வலி அல்லது வலியுடன் கூடிய வயிற்றுப் போக்கு ஏற்படும். உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் இருந்தால் அதை மேலும் அதிகப் படுத்தும்.

சரி இனி மிளகாய் கொண்டு சுவையான ரமலான் ஸ்பெஷல் கிரிஸ்பி மிளகாய் சிக்கன் செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :.
 
சிக்கன் - 1
 
காய்ந்த மிளகாய் - 5
 
பச்சை மிளகாய் - 5
 
எலுமிச்சை - 1
 
கரம் மசாலா - 2
 
எண்ணெய் - தேவைக்கேற்ப
 
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :.
ரமலான் ஸ்பெஷல் கிரிஸ்பி மிளகாய் சிக்கன் செய்வது எப்படி?
காய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் தனித்தனியாக அரைத்து கொள்ளவும்.
 
சிக்கனில் கரம் மசாலா தவிர மற்ற அனைத்து பொடிகளையும், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்.
2 மணி நேரம் கழித்து எடுத்து கரம் மசாலா சேர்த்து கிளறி 5 நிமிடம் வைக்கவும், வாணலியில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
 
சுவையான கிரிஸ்பி மிளகாய் சிக்கன் தயார். சூடாக பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)