பாஸ்தா உடலுக்கு ஆரோக்கிய நன்மை தருமா? படிங்க !





பாஸ்தா உடலுக்கு ஆரோக்கிய நன்மை தருமா? படிங்க !

0

பெரும்பாலும் மைதா மாவைப் பயன்படுத்தித் தான் பாஸ்தாவும் தயாரிக்கப்படுகிறது. மைதா என்பது நன்கு சுத்திகரிக்கப்பட்டு, சத்துக்கள் அனைத்தும் நீக்கப்பட்ட உணவுப் பொருள். 

பாஸ்தா உடலுக்கு ஆரோக்கிய நன்மை தருமா? படிங்க !
இதில் நார்ச்சத்து உள்பட எந்தச் சத்துமே இல்லை என்பதால், உடலுக்கு எந்த நன்மையும் கிடையாது.

பாஸ்தாவில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கும் தன்மை கொண்டது. 

இது, பெரும்பாலானவர்களுக்கு செரிமானத்தில் பிரச்சனை ஏற்படுத்தும். பாஸ்தா ஒரு பதப்படுத்தப்பட்ட உணவு என்பதால், ஆரோக்கியமானது அல்ல.

நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவைத் தவிர்த்து, கோதுமை, மக்காச்சோளம், சிவப்பு அரிசி போன்ற முழுதானிய மாவில் இருந்தும் பாஸ்தா தயாரிக்கப்படுகிறது. 

எந்த மாவில் இருந்து பாஸ்தா தயாரிக்கப்படுகிறதோ, அதைப் பொறுத்து சத்துக்கள் மாறுபடும். 

முழு தானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பாஸ்தாவாக இருந்தால், அதில் வைட்டமின்கள், மக்னீஷியம், இரும்பு, கால்சியம், மாங்கனீஷ் உள்ளிட்ட தாது உப்புக்கள், நார்ச் சத்து போன்றவை இயற்கையாகவே இருக்கும்.

கோதுமையில் செய்யப்பட்ட பாஸ்தாவில் அதிக அளவில் நியாசின், தயாமினும், நார்ச்சத்தும், புரதச் சத்தும் அடங்கி உள்ளது. 

இதைச் சாப்பிடும் போது பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் நமக்கு முழுமையாகக் கிடைக்கும். இந்த வகை பாஸ்தாக்கள், பி காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் கொண்டது.

இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு என்பது மிகவும் மெதுவாக இருக்கும். பாஸ்தாவுடன் அதிக அளவில் காய்கறிகள் சேர்க்கப்பட்டு சமைக்கப்படும் போது, அதன் பலன்களும் கூடும்.

எனவே, கடைசியில் பாஸ்தா வாங்கும் போது அது முழு தானியங்களால் தயாரிக்கப்பட்டதா என்பதைக் கவனித்து வாங்க வேண்டும்.

இரண்டு வயது முதல் 70 வயதினர் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். எளிதில் செரிமானம் ஆகிவிடும்.

பாஸ்தா உடலுக்கு ஆரோக்கிய நன்மை தருமா? படிங்க !

செரிமானம் குறைபாடு உள்ளவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் இதைத் தவிர்த்து, பாஸ்தாவுக்குப் பதில் சப்பாத்தி சாப்பிடுவது நல்லது

நூடுல்ஸ் வகை உணவுகளைச் செய்வது போன்றே பாஸ்தாவையும் தயாரிக்கலாம். 

சுவைக்காக எப்போதாவது சாப்பிடலாமே தவிர, அவ்வப்போது சாப்பிடுவது உடலுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காது என்பது தான் உண்மை.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)